Friday, April 29, 2011

Spanish மொழி கற்கலாம்

இந்த பாடத்தில் ஒருமை ,பன்மை அறியலாம்.

ஒரு பொருளை குறிப்பது ஒருமை என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை குறிப்பது பன்மை என்றும் கூறப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆண்பால் ஒருமையை குறிக்க---un(உன்) ,பெண்பால் ஒருமையை குறிக்க---una(உனா) மற்றும்(and) என்று கூற---y(ஈ) என்றும் வழங்கப்படுகிறது.

A man ---Un hombre(உன் ஓம்ப்ரே)
We are men.--Somos hombres. (சோமாஸ் ஓம்ப்ரேஸ்)
A woman--Una mujer(உனா முஹேர்)
We are women.--Somos mujeres. (சோமாஸ் முஹேரஸ்)

a boy---un niño.(உன் நீஞ்ஞோ)
A girl --Una niña(உனா நீஞ்ஞா)
a flower--una flor(உனா ஃப்ளோர்)
a car---un automóvil(உன் ஆட்டோமோவில்)

This is a tree.---Éste es un árbol.(எஸ்தே எஸ் உன் ஆர்போல்)
These are trees.---Éstos son árboles.(எஸ்டோஸ் சொன் ஆர்போலஸ்)
These are flowers.--Éstas son flores.(எஸ்டாஸ் சொன் ஃப்ளோரஸ்)
This is a building.---Éste es un edificio.(எஸ்தே எஸ் உன் எடிபீசியோ)
These are buildings.---Éstos son edificios.(எஸ்டோஸ் சொன் எடிபீசியோஸ்)

These are not silver coins.---Éstas no son monedas plateadas.(எஸ்டாஸ் நோ சொன் மொனேடாஸ் பிளாட்டியாடஸ்)
A woman and a car.--Una mujer y un automóvil.(உனா முஹேர் ஈ உன் ஆட்டோமோவில்)
A girl and flowers.--Una niña y flores.(உனா நீஞ்ஞா ஈ ஃப்ளோரஸ்)
Boys and trees.---Niños y árboles.(நீஞ்ஞோஸ் ஈ ஆர்போலஸ்)



Spanish மொழி கற்கலாம்

இந்த பாடத்தில் நாம் செய்யும் தொழில்களை ஸ்பானிஷ் மொழியில் எப்படி கூறுவது என்பதை பற்றி அறியலாம்.
careers---carreras(கர்ரேராஸ்)



I am a police officer.---Soy oficial de policía.(சோய் அஃபிசியல் தே போலீஸியா)
I am a student.--Soy estudiante.(சோய் எஸ்தூதியன்தே)
I am a doctor.-----Soy médico.(சோய் மெடிகோ)
I am a bus driver.-Soy conductor de autobús.(சோய் கண்துக்டர் தே ஆட்டோபூஸ்)
He is a mechanic.----Él es mecánico.(எல் எஸ் மெகானிகோ)
She is a nurse.----Ella es enfermera.(ஈஜா எஸ் என்பெர்மா)
She is a teacher.--Ella es profesora.(ஈஜா எஸ் புரொபசோரா)
He is a manager.-----Él es gerente.(எல் எஸ் ஹூரான்தே)
 I am a blacksmith---Yo soy un herrero(யோ சோய் உன் ஹெர்ரேரோ)
I am a goldsmith----Soy un orfebre(சோய் உன் அர்பேபரி)
He is  a lawyer.----Él es un abogado.(எல் எஸ் உன் அபகேடோ)
I am a scientist.----Soy científico.(சோய் சயின்டிபிகோ)
He is a postman.-------Él es cartero. (எல் எஸ் கரதேரோ)



 

Thursday, April 28, 2011

சைட் டிஷ்

சப்பாத்தி ,புல்கா, ரோட்டிக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ் சௌசௌ தால் மாக்கனி. தால் மாக்கனி ,வட இந்திய உணவு.  அதிகம் விரும்பி உண்ணக் கூடியது.

தேவையானவை
சௌசௌ--1
காரட்--2
வெண்ணை 2 ஸ்பூன்
துவரம் பருப்பு ,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, வகைக்கு கால் கப்
உப்பு தேவையான அளவு

அரைப்பதற்கு

தேங்காய் 1கப்
பச்சை மிளகாய் 3
சீரகம் 1ஸ்பூன்
வறுத்த நிலக்கடலை 1பிடி
மிளகு 1ஸ்பூன்

தாளிக்க
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை

தால் துவங்கும் முன் செய்ய வேண்டியவை

பருப்புகளை குழைய வேகவைக்கவும். அரைத்து வைக்கவும்.காய்களை வேகவைத்துக் கொள்ளவும்.


கடாயில் வெண்ணை போட்டு லேசாக உருகியதும் கடுகு சீரகம் ,தாளித்து வேகவைத்து வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும்,அதோடு வேகவைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறக்கும் முன் தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
மிருதுவான சப்பாத்தி செய்து இந்த சைட்டிஷ் வைத்து நன்கு ருசித்து சாப்பிடவும்.







Wednesday, April 27, 2011

மேத்தி பராத்தா

பராத்தா என்பது நம் ஊர் சப்பாத்தி தான். அதில் நடுவில் ஸ்டஃப் செய்து சப்பாத்தி போல் திரட்டி சுட்டு எடுப்பார்கள் அவ்வளவு தான். இது பொதுவாக வட நாட்டில் பிரசித்தி பெற்றது.

மேத்தி பராத்தா செய்ய தேவையானவை
1கப் கோதுமை மாவு
2 ஸ்பூன் எண்ணை
உப்பு தேவையான அளவு
1குழிக் கரண்டி வெதுவெதுப்பான பால்

மாவு தயாரிப்பு 
மேற்குறிப்பிட்ட எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ,தேவையான அளவு தண்ணீர் விட்டு மிருதுவான சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்

ஸ்டஃப் செய்ய தேவையானவை
1 கட்டு வெந்தயக் கீரை
பச்சை மிளகாய் 4
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
வெங்காயம் 2(பொடியாக நறுக்கவும்)
உப்பு தேவையான அளவு

தாளிக்க
பட்டை சோம்பு

கடாயில் எண்ணை விட்டு தாளிக்கவும்,அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு சிவப்பாகும் வரை வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அதையும் சேர்க்கவும்.நன்கு வேகவிடவும். தேவையான உப்பு போட்டு கிளறி இறக்கவும்.


பராத்தா செய்முறை
மாவினை சிறு உருண்டையாக செய்து  கனமாக திரட்டவும்,அதில் ஸ்டஃப்பிங் வைத்து ஓரங்களை நன்றாக மூடி மெல்லிய தாக மீண்டும் திரட்டவும். தவாவை சூடாக்கி பராத்தாக்களை போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

பயன்கள்
வெந்தயக் கீரையில் இரும்புச் சத்து நிறைய உள்ளது.குளிர்ச்சி தரவல்லது. கோதுமை மாவில் நார் சத்து அதிகம்.








பனீர் கோப்தா

ஸ்டார் ஹோட்டல்,ஹோட்டல்களில் கோப்தா சைட்டிஷ்களை அதிக விலைக்கு தருவார்கள். சுவையாக இருப்பதால் விலையை பற்றி கவலை படுவதில்லை. ஆனால் அதிக செலவு செய்யாமல் நாம் வீட்டிலேயே இவற்றை செய்யலாம். சப்பாத்தி, பூரி, நான், புல்கா வகைகளுக்கு மிகவும் ஏற்றது.

தேவையான பொருட்கள்

வீட்டிலேயே பனீர் தயாரிக்கலாம்,அல்லது காட்டேஜ் சீஸ் வாங்கிக் கொள்ளலாம்.
வீட்டில் பனீர் தயாரிக்க தேவையானவை
பால் 1 லிட்டர்
எலுமிச்சை சாறு 3 ஸ்பூன்( 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு ,1ஸ்பூன் சுடு நீர் கலந்து கொள்ளவும்)

தயாரிப்பு முறை
பாலை அடி கனமான பாத்திரத்தில் போட்டு காய்ச்சவும். நன்கு கொதிக்கும் போது , சிறிது சிறிதாக எலுமிச்சை சாறு சேர்க்கவும். பனீர் தனியாக பிரிய ஆரம்பிக்கும்.
வடிதட்டில் கொட்டி நன்கு பச்சைதண்ணீர் கொண்டு 5 நிமிடம் அலசவும். பிறகு தண்ணீர் முழுவதையும், வடிகட்டி பிழியவும்.இது தான் பனீர்.

கோப்தா செய்வதற்கு தேவையானவை
பனீர் 200 கிராம்
வேகவைத்த உருளைக்கிழங்கு 2
மிளகாய் தூள் 1ஸ்பூன்
சோள மாவு 2ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
எண்ணை பொரிப்பதற்கு
உப்பு தேவையான அளவு

கோப்தா செய்முறை
உருளைக்கிழங்கை தோலுரித்து மசிக்கவும், அதோடு துருவிய பனீர்,மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ,சோள மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். உருண்டைகளாக்கி எண்ணையில் பொன்னிறமாக பொரிக்கவும்.


கிரேவி செய்வதற்கு தேவையானவை
வெங்காயம்--4
தக்காளி---4
முந்திரி --10 (ஊற வைத்து விழுதாக அரைக்கவும்)
கரம் மசாலா தூள் --1ஸ்பூன்
மிளகாய்தூள் 1ஸ்பூன்
தயிர்--- அரைகப்
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி தழை--அலங்கரிக்க
வெண்ணை 2ஸ்பூன்

வெங்காயம், தக்காளியை அரைக்கவும். கடாயில் வெண்ணை போட்டு, பட்டை சோம்பு தாளித்து, வெங்காய,தக்காளி விழுது போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.அதில் அரைத்த முந்திரி விழுது, உப்பு ,மிளகாய்தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், தயிர், 2 கப் தண்ணீர் சேர்த்து  5 நிமிடம் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், கொத்தமல்லி தழை, பொரித்த கோப்தாக்கள் போட்டு லேசாக கிளறி 2 நிமிடம் கொதிக்க விடவும்.

குறிப்பு
பரிமாறுவதற்கு முன்பு மட்டுமே பொரித்த கோப்தாக்களை சேர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அதிகம் ஊறி கோப்தா குழைந்து விடும்.



Tuesday, April 26, 2011

Spanish மொழி கற்கலாம்

சென்ற பாடத்தில் நாம் பார்த்த அட்ஜெக்டீவ்ஸின்(adjectives) தொடர்ச்சி.


The flowers smell sweet.----Las flores de olor dulce.(லா ஃப்ளோர் தே ஓலார் துல்சே.)
It tastes sour.-----Tiene un sabor amargo9டியன்னே உன் சபர் அமார்கோ.).
We feel warm.------Nos sentimos caliente.(நோஸ் சென்டிமோஸ் காலியன்தே.)
He looked angry.----------Parecía enojado.(பராசியா எனஹாதோ)
Sita is a clever girl.-----------Sita es una chica inteligente.(சீதா எஸ் உனா சீகா இன்டலிஹன்தே.)
He gave me five mangoes.----Me dio cinco mangos.(மே டியோ சீன்கோ மேங்கோஸ்.)
The boy is lazy.----------El niño es perezoso.(எல் நினோ எஸ் பெரேசோஸோ.)
I ate some rice.-----Comí un poco de arroz.(கோமி உன் போகோ தே அர்ரோஸ்.)
The hand has five fingers.---------La mano tiene cinco dedos. (லா மானோ டியன்னே சீன்கோ தேதோஸ்.)   
                                               (மேலும் கற்கலாம் )



   

முத்துக்களை எடுக்கவோ....கோர்க்கவோ....

இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள எப்பவும் தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி தானா என்று அலுத்துக் கொள்வீர்களா ? இதை டிரை செய்யுங்க அலுப்பு தட்டாது.

முத்து மணிக் குருமா

தேவையானவை

புழுங்கல் அரிசி 100 கிராம்
பச்சரிசி 50 கிராம்
தயிர் 3 கப்
வெங்காயம் 2
கரம் மசாலா தூள் 2ஸ்பூன்
எண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

அரைப்பதற்கு
 பச்சை மிளகாய்--5
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 10
தேங்காய் துருவல் 1கப்


தாளிக்க 
 பட்டை, சோம்பு, 

குருமா செய்ய துவங்கலாமா

அரிசிகளை 1மணி நேரம் ஊற விடவும். பின் கெட்டியாக அரைக்கவும்.அரை டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து, ஒரு சிட்டிகை உப்பு, 1ஸ்பூன் எண்ணை விட்டு அரைத்த மாவை கொட்டி கொழுக்கட்டை மாவு போல் கிளறவும்.சிறிது ஆறிய பின் ,சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் வைத்து 7 நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.
        கடாயில் எண்ணை விட்டு ,பட்டை சோம்பு ,  தாளித்து , நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.அரைத்து வைத்துள்ளதை போட்டு வாசம் போகும் வரை வதக்கவும். வேகவைத்துள்ள உருண்டைகள், தேவையான உப்பு போட்டு கிளறவும். இறுதியில் தயிர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு , கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.




தோட்டம் போடலாமா?--2

                  இடத்தை தேர்வு செய்தபின், இரண்டாவது கட்டம் மண்ணை தேர்வு செய்வது. நல்ல விளைச்சல் தர எப்படிப்பட்ட மண்ணாக இருக்க வேண்டும் , சத்துள்ள , வடிகால் வசதியுள்ள மண் தேவை. தோட்டம் அமைப்பதற்கு ஏற்ற மண்ணை எப்படி கண்டுபிடிப்பது எனக்கு எதுவுமே தெரியாதே என்று நீங்கள் குழம்ப வேண்டாம்.தரை தளத்தில் நீங்கள் தோட்டம் அமைக்க இடத்தை தேர்வு செய்திருந்தால், முதலில் செய்ய வேண்டியது, அந்த மண்ணை லேசாக கொத்தி விட்டு காய்ந்த இலை,தழைகள்,காய்கறி கழிவுகள், மாட்டுச் சாணம் (கிடைத்தால் போடுங்கள் ),போன்றவற்றை கொட்டி தினமும் லேசாக தண்ணீர் தெளித்து மக்க விடுங்கள், இவ்வாறு செய்வது நிலத்திற்கு நல்ல ஊட்டச் சத்தினை தரும்.
                      என்னிடம் இடமில்லை ,நான் என்ன செய்வது என்று கேட்பது கேட்கிறது. தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம்.  இதற்கு முதலில் கரம்பை மண்(குளத்து மண்), ஆற்று மண், செம்மண் மூன்றையும் சரிசம அளவில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மக்கிய தொழு உரம், அல்லது காய்ந்த இலை சருகுகள்,காய்கறி கழிவுகள், உண்டு மீந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றை  குவித்து அதன் மீது கலந்து வைத்துள்ள மண்ணையும் கொட்டி  4--7 நாட்களுக்கு அப்படி யே விட்டுவிட வேண்டும். சிறிதளவு தண்ணீர் தெளித்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இலைசருகுகள் மக்க ஆரம்பிக்கும்.இது செடிகளுக்கு தேவையான சத்துகளை தரும்.இவ்வாறு செய்யும் போது மண்வளம் அபரிமிதமாகும் .மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி,மண்ணுக்கு தேவையான தழை,மணி, சாம்பல் சத்துகள் கிடைப்பதோடு, மண் புழுக்களும் உற்பத்தியாகும்.
                                                                                    (மேலும் வழிகள் கூறுகிறேன்)



Monday, April 25, 2011

ஜாலி! வந்து விட்டது மாம்பழம்

எப்பவும் பால் பாயசம் சாப்பிட்டு போரடித்து விட்டதா ? வித்தியாசமாய் மாம்பழ பாயசம் செய்யலாமே.

தேவையானவை
நன்கு பழுத்த, புளிப்பில்லாத மாம்பழம்---2
சர்க்கரை--2 கப்
கெட்டியான பால் --5 கப்
சேமியா--கால் கப்
வழக்கம் போல் ஏலப் பொடி, வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் அலங்கரிக்க

துவங்கலாமா

மாம்பழத்தை தோல் நீக்கி உள்ளிருக்கும் சதையை  மசிக்கவும். சேமியாவை ,சிறிது பால், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் வேகவிடவும். நன்கு வெந்து வரும் போது மாம்பழத்தை சேர்த்து , சர்க்கரை, போட்டு கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும், மீதமுள்ள பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.ஏலப் பொடி, முந்திரி, கிஸ்மிஸால் அலங்கரிக்கவும்.


பயன்கள்

மாம்பழத்தில் அதிகளவு நார்சத்து, விட்டமின் ஏ,பி,சி, ஈ,மற்றும் தாது பொருட்களான மெக்னீஸியம், கால்சியம், செலினியம், போலிக் ஆஸிட், என்று அனைத்து சத்துகளும் நிறைய உள்ளன.


கிச்சன் டிப்ஸ்

 கசகசா--50 கிராம்
மல்லி விதை(தனியா)---25 கிராம்
பொட்டுக்கடலை--50 கிராம்
கடலை பருப்பு--50 கிராம்
மிளகாய் வத்தல்---7
பொட்டுக்கடலை தவிர்த்து ,மற்றதை சிவக்க வறுத்து ,அனைத்தையும் சேர்த்து பெருங்காயம் சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டால், சுண்டல், பொரியல், செய்யும் போது ,தேங்காய்க்கு பதில் இதை தூவினால் மிகவும் சுவையாக இருக்கும்.


திரு நெல்வேலி அல்வா மட்டும் தான் ருசிக்குமா?

அல்வா என்றதும் நினைவுக்கு வருவது, திருநெல்வேலி அல்வா தான். இந்த அல்வா அதை விடவும் சுவையாக இருக்கும்.

பலாப்பழ அல்வா

தேவையானது

பலாச்சுளை ---10
தேங்காய் துருவல் 1கப்
சர்க்கரை---2 கப்
நெய்--- அரை கப்

செய்வோமா?

பலாச்சுளையை நெய்யில் வதக்கி, தேங்காய் துருவலுடன் மிக்ஸியில் அரைக்கவும்.
வாயகன்ற அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, கால் கப் நீர் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும் போது, அரைத்ததை சேர்த்து கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலப்பொடி.போட்டு கீழே இறக்கி, வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.

பயன்கள்
பலாச்சுளையில், விட்டமின் ஏ--5%, சி--11%,இரும்புச் சத்து,கால்சியம் --3% உள்ளது.இதைத்தவிர எண்ணிலடங்கா மினரல்களும் உள்ளது.





Friday, April 22, 2011

ரசம்

ரசத்தில் பல வகை உண்டு .இது ஒரு தனி வகை.

திராட்சை ரசம்

தேவையானவை

கறுப்பு திராட்சை ---100 கிராம்
துவரம் பருப்பு ---1கப்
புளி கோலி குண்டு அளவு
உப்பு தேவையான அளவு

வறுத்த அரைக்க
மல்லி விதை(தனியா)---2 ஸ்பூன்
மிளகாய் வத்தல்--2
சீரகம்---கால் ஸ்பூன்
மிளகு ---அரை ஸ்பூன்
துவரம்பருப்பு---1ஸ்பூன்

துவங்கும் முன் செய்து வைக்க வேண்டியவை

புளியை கெட்டியாக கரைக்கவும்.
துவரம்பருப்பை வேகவைத்து குழைத்துக் கொள்ளவும்.
திராட்சையை ஜூஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ரசத்தின் துவக்கம் இங்கே

புளி கொதித்ததும், வறுத்து அரைத்த பொடி,மஞ்சள் பொடி சிட்டிகை.உப்பு தேவையான அளவு சேர்த்து கொதி்க்கவிடவும்.
பருப்பு தண்ணீர், திராட்சை ஜூஸை அதில் சேர்க்கவும். நுரைத்து வந்ததும், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

தாளிக்க
 ஒருஸ்பூன் நெய்யில்
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை
பெருங்காயம் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.








Thursday, April 21, 2011

side dishes

 மூங்க் தால் கோப்தா கறி
முளை கட்டிய பாசிப் பயறு --1கப்
அரைக்கீரை---1கப்
உப்பு தேவையானது
மிளகாய் தூள் 1ஸ்பூன்
சோள மாவு 2ஸ்பூன்
கிரேவிக்கு
முந்திரி --10(விழுதாக அரைக்கவும்)
தேங்காய் பால் ---1கப்
வெங்காயம் --கால் கிலோ
தக்காளி---4
இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
உப்பு தேவையானது
கரம் மசாலா 1ஸ்பூன்





 கோப்தா செய்வதற்கு--- 
 step 1: அரைக் கீரையை வேக வைத்து நன்றாக மசிக்கவும்.
 step 2: முளை கட்டிய பாசிப் பயிறையும் வேக வைத்து மசிக்கவும்.  
step 3: கீரை, பயிறு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, சோள மாவு கொஞ்சம் சேர்த்துப் பிசைந்து உருண்டையாக உருட்டி எண்ணையில் பொரித்துக் கொள்ளவும்.  
கிரேவி செய்வதற்கு---
step 1: 10 முந்திரியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். 
step 2: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வதக்கவும், அதில் இஞ்சி ,பூண்டு விழுது, தக்காளி சேர்க்கவும்
 step 3: மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,முந்திரி விழுது, உப்பு போட்டு நன்றாகக் கொதிக்கவிடவும்.  
step 4: இறுதியில் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். 
step 5: பரிமாறுவதற்கு முன் பொரித்த கோப்தாக்களைப் போடவும். இல்லாவிட்டால் அதிகமாக ஊறிவிடும். நன்றாக இருக்காது.

புல்கா, சப்பாத்தி, நான் வகைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

பயன்கள்
முளைகட்டிய பயறு உபயோகிப்பதால் புரதச்சத்து நிறைந்தது. கீரையில் விட்டமின் ஏ.பி போன்ற சத்துக்கள் உள்ளது.


variety rice

கோவைக்காய்(கறிக் கோவை) சாதம்

தேவையானவை

கறிக்கோவை --கால் கிலோ
அரிசி ---1கப்
உப்பு தேவையான அளவு

வறுத்து அரைக்க
கடலைப்பருப்பு 2ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 4ஸ்பூன்
மிளகாய் வற்றல்--4
எண்ணை 1ஸ்பூன்


தாளிக்க 
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
வேர்கடலை
முந்திரி பருப்பு (விரும்பினால்)
கறிவேப்பிலை

எப்படிச் செய்வது ----
 step 1: கோவைக்காயை சுத்தம் செய்து நீள வாக்கில் கட் பண்ணுங்க
step 2: அரிசியை 2 கப் நீர் விட்டு உதிரான சாதமா வடிச்சு வைங்க.
step 3: எண்ணையைக் கடாயில் விட்டு , உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் போட்டு சிவக்க வறுத்துக் கொரகொரப்பா பொடி பண்ணுங்க.
step 4: கட் பண்ணி வைத்திருக்கும் கோவைக்காயைக் கடாயில் போட்டு 2 ஸ்பூன் எண்ணை விட்டு நல்லா வதக்கவும்.வதங்கியவுடன், சாதம், அரைத்த பொடி,தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா கிளறவும்.  
step 5: இன்னொரு கடாயில் தாளிதம் செய்ய 2 ஸ்பூன் எண்ணை விட்டு ,கடுகு, உளுத்தம் பருப்பு, 2 மிளகாய் வத்தல், கறிவேப்பிலை, வேர்க்கடலை சிறிது, முந்திரிப்பருப்பு சிறிது ,பெருங்காயம் போட்டு தாளித்து கிளறிய சாதத்தில் கொட்டி நல்லா ஒரு முறை கிளறிவிடவும்.  
step 6: வித்தியாசமான சுவையுடன் கூடிய கறிக்கோவை பாத் தயார்.

பயன்கள்
அதிக நீர்ச்சத்து கொண்டது கறிக்கோவை. டயாபடீஸ் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்தது இது.லஞ்ச் பாக்ஸிற்கும் ஏற்றது.




ருசியான டிபன்

பாலக் பட்டூரா
தேவையானவை

1கப் பாலக் கீரை
1கப் கோதுமை மாவு
2 பச்சை மிளகாய்
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க தேவையான அளவு

செய்வது சுலபம்


step1:   பாலக் கீரையை லேசாக வதக்கி,மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
step 2:   கோதுமை மாவுடன் அரைத்த கீரை விழுதை சேர்த்து, உப்பு, கொஞ்சம் மிளகாய் தூள்(தேவைப்பட்டால் மட்டும்),  பச்சை மிளகாய்(கீரையிலேயே அரைத்தும் விடலாம்) சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
step 3: அதை பூரி போல் திரட்டி எண்ணையில் பொரிக்கவும்
step 4: சூடாக பீஸ் பட்டர் மசாலா அல்லது சென்னா மசாலாவுடன் ருசித்து சாப்பிடவும்.

குறிப்பு

 பூரி உப்பலாக வர ஒரு ரகசியம்,2 ஸ்பூன் ரவையை வறுத்து மாவில் சேர்க்க பூரி சூப்பர் உப்பலாக நீண்ட நேரம் இருக்கும்.

பயன்கள்

பாலக் கீரையில் இரும்புத் சத்து அதிகம் உள்ளது. கர்பிணிகள், பால்கொடுக்கும் தாய்மார்களுக்கு நல்லது. சாப்பிட தொல்லை தரும் பிள்ளைகளும் இதை விரும்பி சாப்பிடுவர்.




பாயசம்


அப்பி பாயசம்
பாயசங்களில் வித்தியாசமானதும் ,மிகுந்த சுவை மிக்கதும் ,பாரம்பரியமானதும் கூட. ஒவ்வொரு கர்நாடக வீட்டு விஷேசங்களில் தவறாமல் இடம் பெற்றிருக்கும். இனி செய்முறைக்கு வருவோம்.

தேவையான பொருட்கள்
ரவை ---100
கிராம்

சர்க்கரை --250 கிராம்
பால்--1லிட்டர்
நெய் () எண்ணெய் ---பொரிக்கத் தேவையான அளவு
ஏலப் பொடி---- சிறிதளவு

முந்திரி---10
கிஸ்மிஸ்---கொஞ்சம்
செய்முறை
ரவையை சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவிடவும். பின் சிறு சிறு பூரிகளாகத் திரட்டி நெய்யில் பொன்னிறமாகப் பொரிக்கவும். சிறிது ஆறிய பின் கையால் தூளாக்கவும் (பெரிதும்,சிறிதுமாக இருக்க வேண்டும். நைஸாக கூடாது.).பாலை 2 பாகமாகப் பிரித்துக் காய்ச்சிக் கொள்ளவும். ஒரு பகுதியில் தூளாக்கிய ரவை பூரியைப் போட்டு நன்கு வேக விடவும். வெந்த பிறகு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்து வரும்போது 2வது பாகப் பாலை ஊற்றி ,ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி ,கிஸ்மிஸ் சேர்த்துக் கீழே இறக்கவும்.சமைத்து, சுவைத்து ரிஸல்ட் எப்படி என்று கூறுங்கள்

குறிப்பு
சர்க்கரையை குறைத்துக் கொண்டு கன்டன்ஸ்டு மில்க் கூட சேர்க்கலாம் இன்னும் சுவையாக இருக்கும்.



Wednesday, April 20, 2011

பாரம்பரிய சமையல்

நம் முன்னோர்கள் ஜீரண கோளாறுகளுக்கு கை வைத்தியமாக இஞ்சி சாதம் செய்து தருவார்கள்.இப்போதெல்லாம் அவை மறந்தே போய்விட்டன. வீட்டில் இஞ்சியை தொக்கு போல் செய்து பிரிட்ஜில், காற்று புகாத டப்பாவில் வைத்தால் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும். எப்போது தேவையோ அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவையானவை

இஞ்சி 100 கிராம்
 மிளகாய் வற்றல் 2
புளி --பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு
சிறிதளவு வெல்லம்

தாளிக்க
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
பெருங்காயம்
நல்லெண்ணை 4 குழிக் கரண்டி

step 1:  இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும், அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
step 2:   புளியை கெட்டியாக கரைத்து வடிகட்டி வைக்கவும்.
step 3:   ஒரு கடாயில் நல்லெண்ணை விட்டு தாளித்து ,அதில் இஞ்சி விழுதை சேர்த்து நன்கு சுருண்டு வரும் சிறு தீயில் வைத்து கிளறவும்.ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். உப்பு, வெல்லம் சேர்க்கவும்.
சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம் ,இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளவும் பயன்படுத்தலாம்.

குறிப்பு 
நல்லெண்ணையில் தான் இதை செய்ய வேண்டும்.ஏனெனில் இஞ்சி சூடு கிளப்பும். அதை தணிக்க நல்லெண்ணையே சிறந்தது.

 பயன்கள்
செரிமாணத்திற்கு நல்லது.வயிற்று உப்புசம், வாயு, புளித்த ஏப்பம்  வருதல் போன்றவற்றிக்கு மிகவும் நல்லது.







variety rices

இப்போது மாங்காய் சீசன் .மாங்காய் வைத்து என்ன செய்யலாம் ? என்று யோசிக்கவே வேண்டாம்.
மாங்காய் பாத் செய்யலாம்.

அத்தியாவசிய பொருட்கள்

1கப் அரிசி
உப்பு தேவையான அளவு

அரைத்துக் கொள்ள

1பெரிய மாங்காய் (தோலை நீக்கி துருவிக் கொள்ளவும்)
3 மிளகாய் வற்றல்
1 கப் தேங்காய் துருவல் 
1ஸ்பூன் சீரகம்

தாளிக்க
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம் கறிவேப்பிலை

step 1:   அரைக்க கூறியுள்ளதை அரைக்கவும்.
step 2:  சாதத்தை உதிராக வடிக்கவும்
step 3:    ஒரு கடாயில் எண்ணை 4 ஸ்பூன் விட்டு தாளித்து ,அரைத்த விழுதை சேர்த்து சுருள கிளறவும்.சூடான சாதத்தை அதில் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து மேலாக சிறிது நல்லெண்ணை விட்டு நன்கு கிளறி விடவும்.
step 4:   அப்பளம், சிப்ஸ், பச்சடி யோடு சுடாக சாப்பிட மாங்காய் பாத்  ரெடி.

 பயன்கள்

இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் கி.மு 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரென்சு மற்றும் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிபைன்ஸ், மெக்ஸிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தனர்.மாம்பழச்சதையில் 40% நார்ச்சத்து ,15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன.காய் , பழம் இரண்டிலும் ஒரே மாதிரியான பலன்கள் உள்ளன.



Spanish மொழி கற்கலாம்

adjectives என்பது பெயர்ச்சொல்/பிரிதிபெயர்ச் சொல்லின் தன்மை, குணம், நிறம், எண்ணிக்கை ஆகியவற்றை விவரித்து கூறுவது.ஸ்பானிஷ் மொழியில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என பார்க்கலாமா?
The coin is gold(இந்த நாணயம் தங்க நிறம்.)--La moneda es dorada.(லா மொனேடா எஸ் தோர்டா)
The coin is silver.(இது வௌ்ளி நாணயம்)--La moneda es plateada.(லா மொனேடா எஸ் பிளாட்டியேடா).
The car is red.(இந்த காரின் நிறம் சிவப்பு)---El automóvil es  rojo.(எல் ஆட்டோ மோவில் எஸ் ரோஹோ)

The wallet is brown.(இந்த வாலட்டின் நிறம் பழுப்பு )--La billetera es marrón.(லா பிஜேதேரா எஸ் மர்ரோன்)ஸ்பானிஷ் மொழியில் வாலட் என்பது ஆண்கள் பர்சை குறிக்கும்.
The purse is black.(இந்த பர்சின் நிறம் கறுப்பு)----La cartera es negra.(லா கரதேரா எஸ் நேக்ரா)பர்ஸ் என்பது பெண்களின் கைப்பை.
The door is blue.( இந்த கதவின் நிறம் நீலம்)---La puerta es azul.(லா ப்யூர்தா எஸ் அசூல்).
The building is  yellow(இந்த கட்டிடத்தின் நிறம் மஞ்சள்).---El edificio es amarillo(எல் எடிஃபீசியோ எஸ் அமரீஜோ)
The truck is white((இந்த லாரியின் நிறம் வௌ்ளை).---El camión es blanco.(எல் கமியோன் எஸ் ப்ளாங்கோ).

The flower is purple.( இந்த பூவின் நிறம் கத்தரி நிறம்)--La flor es morada.(லா ப்ளோர் எஸ் மோராதா).
It is white(இது வௌ்ளை நிறம்)--Es blanca.(எஸ் ப்ளாங்கா).
It is orange( இது ஆரஞ்சு நிறம்)---Es anaranjada.(எஸ் அனரங்ஹடா)
The tree is green(இந்த மரத்தின் நிறம் பச்சை)----El árbol es verde. (எஸ் ஆர்போல் எஸ் வெர்தே).
It is not blue(இது நீல நிறம் இல்லை)--No es azul.(நோ எஸ் அசூல்)
It is not yellow(இது மஞ்சள் நிறம் இல்லை)---  No es de color amarillo .(நோ எஸ் தே கலோர் அமரீஜோ).

There is a new baby at our house.(எங்கள் வீட்டில் புதிதாக பிறந்த குழந்தை உள்ளது ).--Hay un nuevo bebé en casa.(ஹாய் உன் நியூவோ பேபே என் காசா).
You are my best friend. (நீ, நீங்கள் எனது உற்ற தோழர்)---- eres mi mejor amigo.(து எரேஸ் மி மேஜோர் அமீகோ)
Swimming is easy for a fish!( நீந்துவது மீனிற்கு எளிதானது) ---La natación es fácil para un pez!  (லா நதாசியோன் எஸ் பாசில் பரா உன் பேஸ்)
 நாளை இதன் தொடர்சியை கூறுகிறேன்.



Tuesday, April 19, 2011

variety rices

கொத்தமல்லி புலாவ்

அவசியமான பொருட்கள்

பாசுமதி அரிசி ---1கப்
கொத்தமல்லி ---1 கட்டு
பெரிய வெங்காயம்---2
தக்காளி---2
இஞ்சி --சிறு துண்டு
பூண்டு--10
பச்சை மிளகாய்---4
கரம் மசாலா தூள்--1 ஸ்பூன்
வெண்ணை ---2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்ய துவங்கலாமா?

step 1:அரிசியை கழுவி, 15 நிமிடம் ஊறவிடவும். வெங்காயம், தக்காளி வெட்டிவைக்கவும். இஞ்சி ,பூண்டு அரைத்து விழுதாக்கவும்.
step 2: ஒரு கடாயில் வெண்ணை போட்டு லேசாக உருகியதும், பட்டை சோம்பு தாளிக்கவும். பச்சை மிளகாய், வெங்காயம் வதக்கவும் . லேசான பிங்க் கலர் வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும், அதோடு அரிசியை சேர்த்து லேசாக பிரட்டிக் கொடுக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
step 3: எல்லாவற்றையும் ஒன்றாக குக்கரில் வைத்து உதிரியாக வேகவிடவும். 
step 4: வறுத்த முந்திரி, கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
 step 5:  சுவையான புலாவ் ரெடி டு ஈட்.





variety rices

கொத்த மல்லி சாதம்

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி தழை ---1 கட்டு
அரிசி---1 கப்
உப்பு தேவையான அளவு
சமையல் எண்ணை
நல்லெண்ணை

வறுத்து பொடி செய்ய

கடலை பருப்பு ---2 ஸ்பூன்
மல்லி விதை (தனியா )----4 ஸ்பூன்
 மிளகாய் வத்தல்---5
கடுகு ---1ஸ்பூன்
வெந்தயம் ---1ஸ்பூன்

தாளிக்க

கடுகு---1 ஸ்பூன்
வெந்தயம்---அரைஸ்பூன்
 மிளகாய் வத்தல் 2
வேர்கடலை--- 50 கிராம்
கறிவேப்பிலை--1 ஆர்க்கு



step1:கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு வறுத்து பொடி செய்ய தந்துள்ளவற்றில், கடலை பருப்பு, மல்லிவிதை, மிளகாய் வற்றலை தனியாவும்,கடுகு ,வெந்தயத்தை தனியாகவும் வறுத்து, ஒன்றாக கொரகொரப்பாக பொடி செய்யவும்

step2: புளியை கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

step3:அரிசியை ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் தண்ணீர் வைத்து உதிரியாக சாதம் வடிக்கவும்

step4: ஒரு கடாயில் 3குழிக்கரண்டி எண்ணை விட்டு தாளித பொருட்களை போட்டு தாளிக்கவும்,அதில் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின் அரைத்த பொடியைபோட்டு கட்டி தட்டாமல் கிளறவும். நன்கு கொதிக்கும் போது கொத்தமல்லி தழையை விழுதாக அரைத்து சேர்க்கவும். தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும். மேலாக சிறிதளவு நல்லெண்ணை விடவும்.கெட்டியாக சுருண்டு வர வேண்டும். இந்த பேஸ்ட் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். தேவையான பேஸ்டில் சாதத்தை கலந்தால் சுவையான கொத்தமல்லி சாதம் தயார்.

பயன்கள்
விட்டமின் சி, இரும்புச் சத்து கொண்டது கொத்த மல்லி .



Monday, April 18, 2011

variety rices

தினமும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்துவிடுகிறது. சற்று வித்தியாசமான சமையலை செய்தால் சுவையாக இருக்குமல்லவா?கலவை சாதம் என்றால் உடன் நினைவுக்கு வருவது எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் .இன்று வித்தியாசமாய் நெல்லிக் காய் சாதம் செய்யலாமா?

தேவையானவை

பெரிய நெல்லிக்காய் --10
1கப் அரிசி
உப்பு ருசிக்கேற்ப

தாளிக்க தேவையானவை

எண்ணை ---2 குழிக்கரண்டி
பச்சை மிளகாய்---- 4
காய்ந்த மிளகாய் ---2
கடுகு--சிறிது
கடலைப்பருப்பு--- 2ஸ்பூன்
வேர்கடலை--- 2ஸ்பூன்

 செய்முறை

முதலில் குக்கரில் சாதத்தை உதிரயாக வடித்துக் கொள்ளவும்.பின் நெல்லிக்காய்களையும் லேசாக வேகவைத்து, கொட்டை நீக்கி துண்டுகளாக்கி வைக்கவும்.
 கடாயில் எண்ணை விட்டு .கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிதம் செய்து
அதோடு நெல்லிக்காய் ,சாதம், உப்பு  போட்டு லேசாக கிளறவும். இறுதியில் சிறிதளவு கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி மேலே தூவி அலங்கரித்தால் சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.

பயன்கள்
விட்டமின் சி நிரம்பி இருக்கிறது. அசிடிட்டி வராமல் தடுக்கும் .சளித் தொல்லை நீங்கும்.




Spanish மொழி கற்கலாம்

பாடம் ---5
இதில் உயரம் ,குட்டை, வயதான, இளமையான, மற்றும் இதன் எதிர் மறைகளை அறியலாம்.
I am tall(நான் உயரமானவன்).---Soy alto.(சோய் ஆல்டோ)
I am short.( நான் குள்ளமானவன்)---Soy bajo.(சோய் பாஹோ)
I am young.(நான் இளமையானவன்)--Soy joven.(சோய் ஹோவன்)
I am old.(நான் வயதானவள்)---Soy anciana.(சோய் ஆன்சியானா)


alto என்பது ஆண்பாலிற்கு, alta--என்பது பெண்பாலிற்கு bajo---ஆண்பால், baja---பெண்பால் anciano---ஆண்பால், anciana ----பெண்பால்.இந்த வார்த்தைகளை  அவன், அவள் , நீ, நீங்கள் என்பதற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



She is......( அவள்....)---Ella es.....(ஈக்யா எஸ்...)
He is.....(அவன்......)---Él es ....(எல் எஸ்.....)
You are .....(நீ,,நீங்கள்......) --- Eres....(எரேஸ்......)

எதிர் மறையாக கூற வேண்டுமெனில் இவ்வாறு பயன் படுத்த வேண்டும்.

I am not old(நான் வயதானவள் இல்லை).----No soy anciana.(நோ சோய் ஆன்சியானா)

He is not tall.(அவன் ,அவர் உயரமில்லை)---Él no es alto.(எல் நோ எஸ் ஆல்டோ)

You are not short. (நீ,நீங்கள் குட்டையானவர் இல்லை)---No eres bajo.(நோ எரேஸ் பாஹோ)

 .

The boy is not tall( அந்த சிறுவன் உயரமில்லை).---El niño no es alto.(எல் நினோ நோ எஸ் ஆல்டோ)

The man is not short.(அந்த மனிதர் குள்ளமானவர் இல்லை)----El hombre no es bajo.(எல் ஹோம்ப்ரே நோ எஸ் பாஹோ)

அடுத்து adjectives பற்றி அடுத்த பாடத்தில் கூறுகிறேன்.