Tuesday, March 28, 2017

விருந்து
---------------
அழையா விருந்தாளிகள்
வயிறுமுட்ட உண்டனர்
தேனீக்கள்....

சலனம்
----------------
வெட்ட வெட்ட
சளைக்காமல் முளைக்கின்றது
கோபம்.....

அழகு
------------
தூரிகையின்றி
 தீட்டிய  சித்திரம்  
வானவில்...

 காதல்.
----------------------------
நிறப்பிரிகையின் ஊடாக
நெஞ்சுக் கூட்டில்
வண்ணமாய் நிறைந்திட்டது
 காதல்...
 written by Ranjana Krishnan
Date : 13/09/2010
படபட வென சிறகடித்து
 புறா அதுவும் பறந்திடவே
கடகடவென நகைமுக 
சிட்டு ஒன்று  
விடுவிடுவென  அதன்மேலே 
தாவி ஏற
கலகல சிரிப்பினில்
சோகம் மறந்திடவே
சடசடவென வானில் பறக்க
தடதடவென கிளம்பிய நேரம்
சிலுசிலு வென வீசிய காற்றாலே
 மெய்மெய்யாகாமல் கனவும் தான்
கலைந்து போனதே..
written by Ranjana krishnan
Date :2/09/2010
சிங்க நடை போட்டு வாடா
----------------------------------------------------

 கண்ணா மணிவண்ணா
கோகுலத்தின் குல விளக்கே
ஐயிரு திங்கள் 
அன்னையிவள் கருவாக்கி
காத்து நிற்கின்றேன்
அற்புதம் காட்டவே
அழைக்கின்றேன் நானுமுன்னை

வெண்ணையும் பாலும்
விருப்பமுடன் தந்திடுவேன்
தளிர் நடை போட்டாலும்
துணிந்து நீயும் வாடா

ஊழல் எனும் பூதகியின்
உயிர் பறிக்கவே
உடனே நீயும் வாடா
லஞ்சம் எனும் காளிங்கனை
வஞ்சம் தீர்க்கவே
விரைந்து நீயும் வாடா
சதங்கைகள் சலசலக்க
சடுதியில் நீயும்
சதிராடி வாடா

அன்றோ 
கெளரவர்கள் நூறு தானே
இன்றோ
பல நூறாயிரம் ஆகிடுதே
அருச்சுனன் சோர்ந்திடாமல்
அறம் காக்கவே
புதிய கீதை பாடிட நீயும்
புத்தொளியாய் வாடா

அக்கினிக் குஞ்சினை
நெற்றியில் வைத்திட்ட
சுந்தரி அவள் உன்
சோதரி மணவாளன்
துணைநிற்பான் 
நெஞ்சுறுதி கொண்டு நீயும்
நெடிய பயணம் 
துவங்கிடவே வாடா  

தரணியின் மானம் காக்கவே
தளிர் நடை போட்டது போதும்
தயங்காமல் நீயும்
சிங்க நடை போட்டு
செரும் பகை அறுக்க
வாவா கண்ணா.....!
எழுதியது-----   ரஞ்சனா கிருஷ்ணன்
 நாள்  --------10.08.2010