Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Monday, June 6, 2011

நன்மை தரும் எளிய விரதங்கள்

மகா லட்சுமி இல்லாத இடம் "இல்லம்" என்று அழைக்கப்படமாட்டாது. அந்த தேவியை மகா சக்தியை மிக எளிதாக வழிபடலாம். மிகுந்த பிரயாசை எல்லாம் தேவையில்லை.கடினமான மந்திர தந்திரங்களும் தேவையில்லை.



 கன்று ஈன்ற பசுவின் சாணத்தை கொண்டுவந்து அதில் அகல் போல் செய்து உடைந்து விடாமல், நிழலில் காய வைக்கவும். வழிபாடு தொடங்கும் முன், பூஜை அறையை சுத்தம் செய்து , கோலமிட்டு ,மகாலட்சுமி படத்திற்கு பூமாலை சூட்டி குத்து விளக்கேற்றவும்.பின்  சாண அகலில்  நெய் விட்டு ,பஞ்சுத் திரி, வாழை தண்டு திரி, தாமரை திரி போன்ற எதாவது ஒன்றை பயன்படுத்தி வௌ்ளிக் கிழமை அன்று விளக்கேற்றி தேவியை வழிபட வேண்டும். தெரிந்த மகாலட்சுமி மந்திரம் கூறினாலே போதும் .அல்லது கீழ் உள்ள மகாலட்சுமி மந்திரம் 11 முறை கூறவும்.


 ஓம் மகா தேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்


பாயசம், எலுமிச்சை சாதம் அல்லது ஏதாவது பழம் ,வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்யவும். இவ்வாறு 5,7, 9 வாரங்கள் என முடிந்த அளவு  விளக்கேற்ற அன்னையின் அருள் நிச்சயம் கிட்டும்.
ஒவ்வொரு வாரமும் புது அகல் செய்து தீபம் ஏற்ற வேண்டும் .பழைய அகல் தீபத்தை தண்ணீரில் கரைத்து துளசி மாடம், அல்லது ஏதாவது செடியில் கால்படாத இடத்தில் சேர்க்கவும்.

Monday, May 23, 2011

நினைத்தது நடந்திட ......

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே-----(1)

ராமனாய் வந்து தோன்றி ராவணன் தன்னை வீட்டித்
தராதலம் முழுதும் காத்துத் தம்பியும் தானுமாகப்
பராபரமாகி நின்ற பண்பிளை பகருவார்கள்
நராபதியாகிப் பின்னும் நமனையும் வெல்லுவாரே-----(2)

மேற்குறிப்பிட்ட இரண்டு பாடல்களையும் தினமும் கூறினால் நினைத்து நிச்சயம் நடக்கும். இது என் அனுபவமும் கூட.


சுகப்பிரசவம் உண்டாக

சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும், விண்ணோர்களும்
நித்தமும் முறை முறை நெருங்கி ஆர்ப்புற
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே
ஒரு பகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்து
அருமறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உற பயந்தனள் திறம் கொள் கோசலை.

கர்ப்பிணிப் பெண்கள் இந்த பாடலை கூறினாலும், பிறர் கூறக் கேட்டாலும்
நிச்சயம் சுகப்பிரசவம் உண்டாகும் என்பது ஆன்றோர் வாக்கு.


Thursday, May 5, 2011

அக்ஷய திருதியை ---எப்படி கொண்டாடுவது?

அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சௌபாக்கியங்களையும் தரவல்ல லக்ஷ்மி தேவி எங்கெல்லாம் வாசம் செய்கிறாள்? எந்த இல்லங்களில் இருக்கிறாள்? எந்த பொருட்களை விரும்புகிறாள்?


தெய்வ பக்தி, ஆற்றல், துணிவு, பொறுமை, இனிய பேச்சு, பெரியோரை மதித்தல், போன்ற நற்பண்புகள் உள்ளவரிடம் நீங்காது இருப்பாள்.

சூரிய உதயத்திற்கு முன் எழுந்து , வீட்டை தூய்மையாக வைத்திருக்கும், குப்பைகளை வீட்டின் முன் கொட்டாமலும், பெருக்கி கோலமிட்டு, தீபமேற்றி ,வழிபாடு செய்கின்றனரோ அங்கே இருப்பாள்.
சங்கு, மஞ்சள், குங்குமம், கற்பூர ஜோதி, துளசிச் செடி, வாழை மரம், நெல்லிக்காய், பூரண கும்பம் போன்றவற்றிலும், பசு, யானை போன்றவற்றிலும் நீங்காது இருப்பாள்.

அக்ஷய திருதியை என்றால் தங்கம் வாங்கித்தான் கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் பெண்கள் அதிகாலை எழுந்து குளித்து ,குத்துவிளக்கேற்றி, மகாலட்சுமி படம் அல்லது அரிசி நிறைந்த செம்பு, அல்லது நீர் நிறைத்து அதில் வாசனை திரவியங்களான பச்சை கற்பூரம், ஏலம், போட்டு வைத்து ,வாசனை மலர்களால் தெரிந்த மந்திரம் கூறி ,பாயசம் நைவேத்தியம் வைத்து , மகாலட்சுமியை வணங்கி ,பின் வீட்டிற்கு சுமங்கலிகளை அழைத்து, முடிந்த வரை தட்சிணை வைத்து தோலுரிக்காத ,மட்டையுடன் கூடிய  தேங்காயை வைத்து மஞ்சள், குங்குமம் தந்து வணங்கினாலே மகாலட்சுமி மகிழ்ந்து இல்லம் வருவாள்.

நாளை (மே 6) அக்ஷய திருதியை இவ்வாறு கொண்டாடுங்களேன்.
பழைய ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மகாலட்சுமி மந்திரம் உங்களுக்காக.....


அஷ்ட லட்சுமி தியானம்

1 தன லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.

2 வித்யா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

3 தான்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

4 வீர லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா 
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

5 ஸௌபாக்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

6 சந்தான லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா 
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

7 காருண்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

8 மஹா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.



Sunday, March 13, 2011

தீப வழிபாடு---1

பிரபஞ்சம் தோன்றிய காலத்திலிருந்தே தெய்வ வழிபாடு இருந்து வருகிறது. முதன் முதலில் பஞ்ச பூதங்களையும், பின் மரம்,செடி, கொடி, ஊர்வன, பறப்பன,என விலங்கு, பறவை முதலியவற்றையும் கடவுளாக வழிபட்டனர்.காலப் போக்கில் உருவ வழிபாடு மெல்ல மெல்ல உருவாக்கப்பட்டது. பூஜை முறை எதுவானாலும் நாம் முதலில் தீப மேற்றியே இறைவனை வழிபடுகிறோம். எல்லா தெய்வத்திற்கும் ஒரே விதமாக தீபம் ஏற்றலாமா? என்றால் ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒவ்வொரு விதமான தீபம் ஏற்ற வேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த தெய்வத்திற்கு ,இப்படி தீப ஏற்றிட இன்னின்ன பலன் கிடைக்கும் என்கிறது வேதம்.
1.நல்லெண்ணை----தீபத்திற்கு உகந்தது.சனி பரிகாரம் தரும்.லட்சுமி கடாக்ஷம் கிட்டும்.
2.தேங்காய் எண்ணை---நல்ல தேவதைகள், வீட்டில் வாசம் செய்யும். துர்தேவதைகள் அண்டாது. கணவன், மனைவி பாசம் கூடும்,பைழய பாவங்கள் அனைத்தும் போகும்.
பிள்ளையாருக்கு தினமும், தேங்காய் எண்ணை தீப ஏற்ற எண்ணியதெல்லாம் நடக்கும்.
3.இலுப்பை எண்ணை ---எல்லா பாவங்களும் தீரும்,மோட்சம் கிட்டும்.
சிவனுக்கு இலுப்பை எண்ணை தீப ஏற்றி வழிபட நல்ல பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.
4.விளக்கெண்ணை ----தெய்வ அருள் கிட்டும்,புகழ்,கீர்த்தி ,ஜீவன சுகம் கிட்டும்.தாம்பத்தியம் சிறப்பாக இருக்கும்.
5.வேப்ப எண்ணை ---குல தெய்வம் எதுவானாலும் அதற்கு ஏற்றது இந்த எண்ணை .
6.பசு நெய்---லட்சுமி வாசம் புரிவாள்.மன மகிழ்ந்துஎல்லா சுகமும்,சந்தோஷமும் கிடைக்கும்.
அம்பிகைக்கு நெய்,விளக்கெண்ணை ,வேப்பெண்ணை,இலுப்பை எண்ணை,தேங்காய் எண்ணை கலந்து 1 மண்டலம்(45நாட்கள்) தொடர்ந்து தீபம் ஏற்ற அம்பாளின் அருள் பரிபூரணமாய் கிட்டும்.

தீப மந்திரம்

காலை தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய மந்திரம்

ஸோயம் பாஸ்கர வித்யஸ் த கிரணோத் கரபாஸ்வர தீப ஜ்யோதிர் நமஸ்துப்யம் சுப்ர பாதம் குருஷ்வமே.

மாலை தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய மந்திரம்

சிவம் பவது கல்யாணம் ஆயுர் ஆரோக்கிய வர்த்தனம் மம துக்க விநாசாய ஸந்த்யா தீபம் நமோ நம .

விளக்கேற்றி பின் தீபத்தை வழிபடும் போது கூற வேண்டிய மந்திரம்
தீப ஜோதியானவளே நமஸ்காரம்
திருவாகி வந்தவளே நமஸ்காரம்
ஆபத் பாந்தவியே நமஸ்காரம்
அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்
என்று கூறி வழிபட எல்லா நலன்களும் சேரும்.
ரஞ்சனா