Showing posts with label tips. Show all posts
Showing posts with label tips. Show all posts

Saturday, May 14, 2011

காட்டன் சாரீஸிற்கு சூப்பராக கஞ்சி போடலாமா?

காட்டன் சாரீஸ்களை கட்டாத, விரும்பாத பெண்கள் இருக்க முடியாது. அழகாக கஞ்சி போட்டு அயர்ன் செய்த சாரீஸ் கட்டிய பெண்களை பார்க்கவே சூப்பராக இருக்கும். இந்த வெயில் காலத்திற்கு காட்டன் சாரிகளே ஏற்றது. நாமே வீட்டில் கஞ்சி போட்டு , அழகாக உடுத்தும்போது  , எல்லோரையும்  புதுப் புடவையா என்று கேட்க தூண்டும்.


 STEP -1

மைதா மாவு அல்லது ஜவ்வரிசி மாவிலேயே கஞ்சி தயார் செய்யலாம்.இதற்காக காஸ்ட்லி ஸ்டார்ச் பவுடர் வாங்க வேண்டாம். 1 டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசி அல்லது மைதா மாவினை நீரில் கரைத்து, கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இறக்கவும்.

STEP---2

கட்டிகள் இல்லாமல் வடிகட்டவும். நன்கு உலர்ந்த புடவையை மட்டுமே கஞ்சியில் நனைக்கவும். மிகவும் இறுக்கமாக கசக்கி பிழியக் கூடாது.

STEP---3
டார்க் கலர் புடவைக்கு கொஞ்சம் சொட்டு நீலம் கூட கஞ்சியில் சேர்க்கலாம். கஞ்சியில் நனைத்த பின் , நன்கு உதரி, மடிப்புகளின்றி வெயிலில் உலர்த்தவும்.


STEP---4
 உங்களுக்கு பிடித்த  வாசனை திரவியத்தை(perfumes) கஞ்சியில் சில சொட்டு விடும் போது கஞ்சியின் அழுக்கு வாடை அடிக்காமல் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

STEP ---5
நன்கு நீவி அயர்ன் செய்யவும்.


 இளசுகள்   ,""தேரடி வீதியில் தேவதை வந்தா"".....என்று பாடுகிறார்களா ? உங்களை பார்த்து தாங்க.


Friday, May 6, 2011

TIPS

ஆரஞ்சு பழ தோலை தூக்கி எறியாமல், முக அழகிற்கான ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.
ஆரஞ்சு தோலை காய வைத்து நன்கு உலர்ந்தது---1கப்,
காய்ந்த ரோஜா இதழ்--1கப்
இது இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் பொடியாக்கவும்.அதோடு கடலைமாவு---2கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து ,அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி ,காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் முகப் பளபளப்பு கிட்டும்.

டிப்ஸ்---2
பாலை காய்ச்சியவுடன் அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

டிப்ஸ்---3
தக்காளியை ஜூஸ் செய்து அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு கிட்டும்.

டிப்ஸ்--4
வெண்ணை சிறிது எடுத்து நன்கு குழைத்து முகத்தில் ,முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும்.கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.

டிப்ஸ்--5
நன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை கூழாக்கி அதையும் முகத்தில் தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு  கூடும்.







Tuesday, May 3, 2011

TIPS

 பட்டுப்புடவைகளை விரும்பாத நங்கையர்களே இருக்க முடியாது.அதிக விலை தந்து வாங்கும் புடவையை எப்படி பராமரிப்பது? சில டிப்ஸ் .....


புடவையை கட்டிய பிறகு வியர்வை வாடை போக சிறிது நேரம் நிழலில் காயவைத்து பின் எடுத்து மடித்து வைக்க வேண்டும்.
அடிக்கடி துவைத்துக் கொண்டே இருக்க கூடாது.அப்படி செய்வதால் பளபளப்பு குறையும்.

புடவையை துவைக்க கடினமான சோப்புகள், பவுடர்கள் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக தலைக்கு போடும் ஷாம்புவை சிறிது நீரில் கலந்து அதில் புடவையை நனைத்து துவைக்கலாம்.

நம்மை அறியாமல் ஏதேனும் கரை படிந்து விட்டால் கவலை வேண்டாம்... சிறிது யூகலிப்டஸ் தைலம் பயன்படுத்தி, பஞ்சினால் துடைத்தால் கரை பளிச்.

புடவையை மடித்து வைக்கும் போது அதன் ஜரிகை பகுதி உள்புறமாக இருக்கும் படி வைத்து மடிக்க வேண்டும். இதனால் ஜரிகை கறுத்து போகாது. மேலும் ஏதாவது துணியின் உள் வைத்து  மூடி  வைக்க வேண்டும்.

இரும்பு பீரோவில் வைப்பதை முடிந்தவை தவிர்த்தல் நலம்.