Tuesday, April 26, 2011

தோட்டம் போடலாமா?--2

                  இடத்தை தேர்வு செய்தபின், இரண்டாவது கட்டம் மண்ணை தேர்வு செய்வது. நல்ல விளைச்சல் தர எப்படிப்பட்ட மண்ணாக இருக்க வேண்டும் , சத்துள்ள , வடிகால் வசதியுள்ள மண் தேவை. தோட்டம் அமைப்பதற்கு ஏற்ற மண்ணை எப்படி கண்டுபிடிப்பது எனக்கு எதுவுமே தெரியாதே என்று நீங்கள் குழம்ப வேண்டாம்.தரை தளத்தில் நீங்கள் தோட்டம் அமைக்க இடத்தை தேர்வு செய்திருந்தால், முதலில் செய்ய வேண்டியது, அந்த மண்ணை லேசாக கொத்தி விட்டு காய்ந்த இலை,தழைகள்,காய்கறி கழிவுகள், மாட்டுச் சாணம் (கிடைத்தால் போடுங்கள் ),போன்றவற்றை கொட்டி தினமும் லேசாக தண்ணீர் தெளித்து மக்க விடுங்கள், இவ்வாறு செய்வது நிலத்திற்கு நல்ல ஊட்டச் சத்தினை தரும்.
                      என்னிடம் இடமில்லை ,நான் என்ன செய்வது என்று கேட்பது கேட்கிறது. தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம்.  இதற்கு முதலில் கரம்பை மண்(குளத்து மண்), ஆற்று மண், செம்மண் மூன்றையும் சரிசம அளவில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மக்கிய தொழு உரம், அல்லது காய்ந்த இலை சருகுகள்,காய்கறி கழிவுகள், உண்டு மீந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றை  குவித்து அதன் மீது கலந்து வைத்துள்ள மண்ணையும் கொட்டி  4--7 நாட்களுக்கு அப்படி யே விட்டுவிட வேண்டும். சிறிதளவு தண்ணீர் தெளித்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இலைசருகுகள் மக்க ஆரம்பிக்கும்.இது செடிகளுக்கு தேவையான சத்துகளை தரும்.இவ்வாறு செய்யும் போது மண்வளம் அபரிமிதமாகும் .மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி,மண்ணுக்கு தேவையான தழை,மணி, சாம்பல் சத்துகள் கிடைப்பதோடு, மண் புழுக்களும் உற்பத்தியாகும்.
                                                                                    (மேலும் வழிகள் கூறுகிறேன்)



Monday, April 25, 2011

ஜாலி! வந்து விட்டது மாம்பழம்

எப்பவும் பால் பாயசம் சாப்பிட்டு போரடித்து விட்டதா ? வித்தியாசமாய் மாம்பழ பாயசம் செய்யலாமே.

தேவையானவை
நன்கு பழுத்த, புளிப்பில்லாத மாம்பழம்---2
சர்க்கரை--2 கப்
கெட்டியான பால் --5 கப்
சேமியா--கால் கப்
வழக்கம் போல் ஏலப் பொடி, வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் அலங்கரிக்க

துவங்கலாமா

மாம்பழத்தை தோல் நீக்கி உள்ளிருக்கும் சதையை  மசிக்கவும். சேமியாவை ,சிறிது பால், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் வேகவிடவும். நன்கு வெந்து வரும் போது மாம்பழத்தை சேர்த்து , சர்க்கரை, போட்டு கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும், மீதமுள்ள பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.ஏலப் பொடி, முந்திரி, கிஸ்மிஸால் அலங்கரிக்கவும்.


பயன்கள்

மாம்பழத்தில் அதிகளவு நார்சத்து, விட்டமின் ஏ,பி,சி, ஈ,மற்றும் தாது பொருட்களான மெக்னீஸியம், கால்சியம், செலினியம், போலிக் ஆஸிட், என்று அனைத்து சத்துகளும் நிறைய உள்ளன.


கிச்சன் டிப்ஸ்

 கசகசா--50 கிராம்
மல்லி விதை(தனியா)---25 கிராம்
பொட்டுக்கடலை--50 கிராம்
கடலை பருப்பு--50 கிராம்
மிளகாய் வத்தல்---7
பொட்டுக்கடலை தவிர்த்து ,மற்றதை சிவக்க வறுத்து ,அனைத்தையும் சேர்த்து பெருங்காயம் சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டால், சுண்டல், பொரியல், செய்யும் போது ,தேங்காய்க்கு பதில் இதை தூவினால் மிகவும் சுவையாக இருக்கும்.


திரு நெல்வேலி அல்வா மட்டும் தான் ருசிக்குமா?

அல்வா என்றதும் நினைவுக்கு வருவது, திருநெல்வேலி அல்வா தான். இந்த அல்வா அதை விடவும் சுவையாக இருக்கும்.

பலாப்பழ அல்வா

தேவையானது

பலாச்சுளை ---10
தேங்காய் துருவல் 1கப்
சர்க்கரை---2 கப்
நெய்--- அரை கப்

செய்வோமா?

பலாச்சுளையை நெய்யில் வதக்கி, தேங்காய் துருவலுடன் மிக்ஸியில் அரைக்கவும்.
வாயகன்ற அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, கால் கப் நீர் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும் போது, அரைத்ததை சேர்த்து கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலப்பொடி.போட்டு கீழே இறக்கி, வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.

பயன்கள்
பலாச்சுளையில், விட்டமின் ஏ--5%, சி--11%,இரும்புச் சத்து,கால்சியம் --3% உள்ளது.இதைத்தவிர எண்ணிலடங்கா மினரல்களும் உள்ளது.





Friday, April 22, 2011

ரசம்

ரசத்தில் பல வகை உண்டு .இது ஒரு தனி வகை.

திராட்சை ரசம்

தேவையானவை

கறுப்பு திராட்சை ---100 கிராம்
துவரம் பருப்பு ---1கப்
புளி கோலி குண்டு அளவு
உப்பு தேவையான அளவு

வறுத்த அரைக்க
மல்லி விதை(தனியா)---2 ஸ்பூன்
மிளகாய் வத்தல்--2
சீரகம்---கால் ஸ்பூன்
மிளகு ---அரை ஸ்பூன்
துவரம்பருப்பு---1ஸ்பூன்

துவங்கும் முன் செய்து வைக்க வேண்டியவை

புளியை கெட்டியாக கரைக்கவும்.
துவரம்பருப்பை வேகவைத்து குழைத்துக் கொள்ளவும்.
திராட்சையை ஜூஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ரசத்தின் துவக்கம் இங்கே

புளி கொதித்ததும், வறுத்து அரைத்த பொடி,மஞ்சள் பொடி சிட்டிகை.உப்பு தேவையான அளவு சேர்த்து கொதி்க்கவிடவும்.
பருப்பு தண்ணீர், திராட்சை ஜூஸை அதில் சேர்க்கவும். நுரைத்து வந்ததும், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

தாளிக்க
 ஒருஸ்பூன் நெய்யில்
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை
பெருங்காயம் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.