Monday, April 18, 2011

variety rices

தினமும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்துவிடுகிறது. சற்று வித்தியாசமான சமையலை செய்தால் சுவையாக இருக்குமல்லவா?கலவை சாதம் என்றால் உடன் நினைவுக்கு வருவது எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் .இன்று வித்தியாசமாய் நெல்லிக் காய் சாதம் செய்யலாமா?

தேவையானவை

பெரிய நெல்லிக்காய் --10
1கப் அரிசி
உப்பு ருசிக்கேற்ப

தாளிக்க தேவையானவை

எண்ணை ---2 குழிக்கரண்டி
பச்சை மிளகாய்---- 4
காய்ந்த மிளகாய் ---2
கடுகு--சிறிது
கடலைப்பருப்பு--- 2ஸ்பூன்
வேர்கடலை--- 2ஸ்பூன்

 செய்முறை

முதலில் குக்கரில் சாதத்தை உதிரயாக வடித்துக் கொள்ளவும்.பின் நெல்லிக்காய்களையும் லேசாக வேகவைத்து, கொட்டை நீக்கி துண்டுகளாக்கி வைக்கவும்.
 கடாயில் எண்ணை விட்டு .கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிதம் செய்து
அதோடு நெல்லிக்காய் ,சாதம், உப்பு  போட்டு லேசாக கிளறவும். இறுதியில் சிறிதளவு கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி மேலே தூவி அலங்கரித்தால் சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.

பயன்கள்
விட்டமின் சி நிரம்பி இருக்கிறது. அசிடிட்டி வராமல் தடுக்கும் .சளித் தொல்லை நீங்கும்.




Spanish மொழி கற்கலாம்

பாடம் ---5
இதில் உயரம் ,குட்டை, வயதான, இளமையான, மற்றும் இதன் எதிர் மறைகளை அறியலாம்.
I am tall(நான் உயரமானவன்).---Soy alto.(சோய் ஆல்டோ)
I am short.( நான் குள்ளமானவன்)---Soy bajo.(சோய் பாஹோ)
I am young.(நான் இளமையானவன்)--Soy joven.(சோய் ஹோவன்)
I am old.(நான் வயதானவள்)---Soy anciana.(சோய் ஆன்சியானா)


alto என்பது ஆண்பாலிற்கு, alta--என்பது பெண்பாலிற்கு bajo---ஆண்பால், baja---பெண்பால் anciano---ஆண்பால், anciana ----பெண்பால்.இந்த வார்த்தைகளை  அவன், அவள் , நீ, நீங்கள் என்பதற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



She is......( அவள்....)---Ella es.....(ஈக்யா எஸ்...)
He is.....(அவன்......)---Él es ....(எல் எஸ்.....)
You are .....(நீ,,நீங்கள்......) --- Eres....(எரேஸ்......)

எதிர் மறையாக கூற வேண்டுமெனில் இவ்வாறு பயன் படுத்த வேண்டும்.

I am not old(நான் வயதானவள் இல்லை).----No soy anciana.(நோ சோய் ஆன்சியானா)

He is not tall.(அவன் ,அவர் உயரமில்லை)---Él no es alto.(எல் நோ எஸ் ஆல்டோ)

You are not short. (நீ,நீங்கள் குட்டையானவர் இல்லை)---No eres bajo.(நோ எரேஸ் பாஹோ)

 .

The boy is not tall( அந்த சிறுவன் உயரமில்லை).---El niño no es alto.(எல் நினோ நோ எஸ் ஆல்டோ)

The man is not short.(அந்த மனிதர் குள்ளமானவர் இல்லை)----El hombre no es bajo.(எல் ஹோம்ப்ரே நோ எஸ் பாஹோ)

அடுத்து adjectives பற்றி அடுத்த பாடத்தில் கூறுகிறேன்.




Friday, April 15, 2011

Spanish மொழி கற்கலாம்---4

 நமது அன்றாட வாழ்வில் ,நம்மை சந்திப்பவர்களிடம்  கேட்க ,பேச, பயன்படுத்தும் சொற்கள்


Where are you from?(நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?)----¿De dónde eres?(தே தோண்டே எரேஸ்?)
I am from.(நான் வந்து...)..--------Yo soy de …(யோ சோய் டே...)
What do you do?(நீ,/நீங்கள் என்ன செய்கிறீர்கள்?)----¿A qué te dedicas?( அ கே தே டெடிகாஸ்)
I am a student( நான் ஒரு மாணவன்)---Soy un estudiante(சோய் உன் எஸ்டூடிஎன்டே)
I am a teacher( நான் ஒரு ஆசிரியர் )----Soy un maestro(சோய் உன் மேஸ்ட்ரோ)
Where do you live?(நீ,/ நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?)-----¿En dónde vives?(என் டோன்தே வைவஸ்?)
How old are you?( உன்/ ,உங்கள் வயது என்ன?)----¿Cuántos años tienes?(குவாண்டோஸ் அஞ்ஞோஸ் டியன்னேஸ்?)
I am ... years old( என் வயது.....வருடங்கள்)----Yo tengo …. años.(யோ டெங்கோ அஞ்ஞோஸ்)
I don't understand, Can you repeat that( என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை, மீண்டும் கூறுகிறீர்களா?) ---No entiendo ¿Me puedes repetir eso?(நோ என்டியன்டோ .மி ப்யூடஸ் ரிபீட்டர் இசோ?)
Can you help me?(எனக்கு உதவி செய்வீர்களா?)---¿Me puedes ayudar?(மி ப்யூடஸ் அய்யுதர்?)
Please( தயவு செய்து)---Por Favor(பொர் ஃபேவர்)
Excuse me(மன்னிக்கவும்)---Disculpe(டிஸ்கூல்பே)
I am sorry( என்னை மன்னி்த்து விடுங்கள்)---Lo siento( லோ சியன்டே)
See you soon( விரைவில் சந்திக்கிறேன்)---Nos vemos pronto(நோஸ் வீமாஸ் ப்ரோன்டோ)
See you tomorrow(நாளை சந்திக்கிறேன்)---Hasta mañana(ஹஸ்தா மன்யானா)
Thank you (நன்றி)---Gracias(கிரேசியஸ்)
You are welcome!( பரவாயில்லை)--¡De nada!(தே நாதா)
Good bye( சென்று வருகிறேன்) --Adiós(அடியோஸ்)
Have a nice day( நல்ல நாளாக இருக்கட்டும்)-- Qué tengas un buen día( கே டங்காஸ் உன் ப்யூன் தியா)


Thursday, April 14, 2011

இசை--எளிய அறிமுகம்---5

ஸ்வரத்திற்கு ஒத்த தமிழ் பெயர்கள்
ஸ(-ஸட்ஜம்)-----குரல்
ரி(ரிஷபம் )----துத்தம்
க(காந்தாரம்)----கைக்கிளை
ம(மத்தியமம்)----உழை
ப(பஞ்சமம்)---இளி
த(தைவதம்)---விளரி
நி(நிஷாதம்)---தாரம்

ஸ்வர ஸ்தானங்கள்
வட மொழிப் பெயர்                         தமிழ்பெயர்
ஸட்ஜம்                                              குரல்
சுத்த ரிஷபம்                                      குறை துத்தம்
சதுஸ்ருதி ரிஷபம்                           நிறை துத்தம்
சாதாரண காந்தாரம்                         குறை கைக்கிளை
அந்தர காந்தாரம்                               நிறை கைக்கிளை
சுத்த மத்யமம்                                    குறை உழை
பிரதி மத்யமம்                                    நிறை உழை
பஞ்சமம்                                               இளி
சுத்த தைவதம்                                   குறை விளரி
சதுஸ்ருதி தைவதம்                       நிறை விளரி
கைசிகி நிஷாதம்                              குறை தாரம்
காகலி நிஷாதம்                                நிறை தாரம்

"அகநிலைக்குரிய நரம்பின திரட்டி நிறை, குறை, கிழமை பெறுமென மொழிப "
                                                    (சிலப்பதிகாரம் 8 :39 --அடியார் உரை)
ராகம்
கேட்பதற்கு இனிமையாகவும், நம் மனதின் உணர்ச்சிகளுக்கு விருந்தளிக்கும் அல்லது  உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாகவும் உள்ள ஸ்வரங்களின் கோர்வை பல்வேறு பட்ட ராகங்களை உருவாக்குகின்றன. எந்த ஒரு ராகமும் அதற்கென பிரத்யேக குணாம்சங்களை கொண்டு ஜீவிக்கின்றன. கேட்பவர்களை மயக்கி தன்னிடத்தே வைத்துக் கொள்கிறது.
முதல் ஸ்வரமான ஸ உடலின் ஆறு பாகங்களான நாசி, தொண்டை, இதயம், வாய் நாக்கு, பல் முதலியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவானது. இதைத் தான் நாரதரும்
"யமாஸ்ருஷ்ட பிரஜாயந்தே ரிஷபத்யா ஷட் ஏவ து, தஸ்மாத்  ஸட்ஜ இதி பிரோக்தாஹ " என்கிறார்.
                                                      (இன்னிசை தரும்)


arts and crafts

எல்லோரும் எளிமையாக ஏதாவது ஒரு கை வேலை செய்ய கற்றுக் கொண்டுவருகின்றனர். அந்த வகையில் இன்று மணல் ஓவியம் செய்ய கற்றுக் கொள்வோமா.

தேவையான பொருட்கள்
நைஸாக உள்ள ஆற்று மணல்
கலர்கள்(acrylic /pearl colour)
தடியான அட்டை
வெல்வெட் அல்லது காட்டன் துணி
ஒட்டுவதற்கு பெவிகால்
விரும்பிய டிசைன்

செய்யலாமா

முதலில் தடியான அட்டையில் பெவிகால் தடவி துணியை ஒட்டி காயவிடவும். பின்னர் எடுத்துக் கொண்ட டிசைனை டிரேஸ் செய்யவும்.அதில் பெவிகால் தடவி. மணலை தூவி விடவும். அதிகமான மணலை காய்ந்ததும் தட்டிவிடலாம்.பின்னர் அதில் நாம் விரும்பிய கலர்களால் மணலின் மீது பெயிண்ட் செய்யவும். தேவைக்கேற்ப பிரேம் செய்யவும். சுவரில் மாட்ட ஏதுவான அழகான மணல் ஓவியம் இப்போது உங்கள் கைகளில்.