Tuesday, May 3, 2011

பாரம்பரிய சமையல்

நம் பாரம்பரிய உணவு முறைகளை விடாமல் கடைப்பிடித்தாலலே பெருமளவு நோய்களை தவிர்க்கலாம். இப்போதெல்லாம் ஜங் புட்ஸ் ,மோகம் அதிகளவு உள்ளதால் நம் பழமை மறந்தே விட்டது.

ஆரோக்கிய வாழ்விற்கு திப்பிலி சட்னி

தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் ---10தக்காளி ---2
புளி ----சின்ன கோலி அளவு
உப்பு தேவையான அளவு
 பெருங்காயம் சிறிது

வறுத்து கொள்ள வேண்டியவை

 அரிசி திப்பிலி(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)----2 ஸ்பூன்
மிளகு ---1 ஸ்பூன்
சீரகம்---அரை ஸ்பூன்
மல்லி விதை----2 ஸ்பூன்
ஓமம்----கால் ஸ்பூன்


 செய்முறை
வெங்காயம் ,தக்காளி லேசாக வதக்கவும்.
வறுக்க கொடுத்துள்ள சாமான்களை  வறுத்து அதோடு வெங்காயம், தக்காளி்  , உப்பு, புளி, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் நெய்யை சாதத்தில் ஊற்றி  பிசைந்து சாப்பிடலாம்.

பயன்கள்

ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. வாயுத் தொல்லை, சளி ,இருமல் நீங்கும்.பிள்ளை பேறு அடைந்த பெண்களுக்கு மிகவும் நல்லது.






TIPS

 பட்டுப்புடவைகளை விரும்பாத நங்கையர்களே இருக்க முடியாது.அதிக விலை தந்து வாங்கும் புடவையை எப்படி பராமரிப்பது? சில டிப்ஸ் .....


புடவையை கட்டிய பிறகு வியர்வை வாடை போக சிறிது நேரம் நிழலில் காயவைத்து பின் எடுத்து மடித்து வைக்க வேண்டும்.
அடிக்கடி துவைத்துக் கொண்டே இருக்க கூடாது.அப்படி செய்வதால் பளபளப்பு குறையும்.

புடவையை துவைக்க கடினமான சோப்புகள், பவுடர்கள் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக தலைக்கு போடும் ஷாம்புவை சிறிது நீரில் கலந்து அதில் புடவையை நனைத்து துவைக்கலாம்.

நம்மை அறியாமல் ஏதேனும் கரை படிந்து விட்டால் கவலை வேண்டாம்... சிறிது யூகலிப்டஸ் தைலம் பயன்படுத்தி, பஞ்சினால் துடைத்தால் கரை பளிச்.

புடவையை மடித்து வைக்கும் போது அதன் ஜரிகை பகுதி உள்புறமாக இருக்கும் படி வைத்து மடிக்க வேண்டும். இதனால் ஜரிகை கறுத்து போகாது. மேலும் ஏதாவது துணியின் உள் வைத்து  மூடி  வைக்க வேண்டும்.

இரும்பு பீரோவில் வைப்பதை முடிந்தவை தவிர்த்தல் நலம்.



Friday, April 29, 2011

Spanish மொழி கற்கலாம்

இந்த பாடத்தில் ஒருமை ,பன்மை அறியலாம்.

ஒரு பொருளை குறிப்பது ஒருமை என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை குறிப்பது பன்மை என்றும் கூறப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆண்பால் ஒருமையை குறிக்க---un(உன்) ,பெண்பால் ஒருமையை குறிக்க---una(உனா) மற்றும்(and) என்று கூற---y(ஈ) என்றும் வழங்கப்படுகிறது.

A man ---Un hombre(உன் ஓம்ப்ரே)
We are men.--Somos hombres. (சோமாஸ் ஓம்ப்ரேஸ்)
A woman--Una mujer(உனா முஹேர்)
We are women.--Somos mujeres. (சோமாஸ் முஹேரஸ்)

a boy---un niño.(உன் நீஞ்ஞோ)
A girl --Una niña(உனா நீஞ்ஞா)
a flower--una flor(உனா ஃப்ளோர்)
a car---un automóvil(உன் ஆட்டோமோவில்)

This is a tree.---Éste es un árbol.(எஸ்தே எஸ் உன் ஆர்போல்)
These are trees.---Éstos son árboles.(எஸ்டோஸ் சொன் ஆர்போலஸ்)
These are flowers.--Éstas son flores.(எஸ்டாஸ் சொன் ஃப்ளோரஸ்)
This is a building.---Éste es un edificio.(எஸ்தே எஸ் உன் எடிபீசியோ)
These are buildings.---Éstos son edificios.(எஸ்டோஸ் சொன் எடிபீசியோஸ்)

These are not silver coins.---Éstas no son monedas plateadas.(எஸ்டாஸ் நோ சொன் மொனேடாஸ் பிளாட்டியாடஸ்)
A woman and a car.--Una mujer y un automóvil.(உனா முஹேர் ஈ உன் ஆட்டோமோவில்)
A girl and flowers.--Una niña y flores.(உனா நீஞ்ஞா ஈ ஃப்ளோரஸ்)
Boys and trees.---Niños y árboles.(நீஞ்ஞோஸ் ஈ ஆர்போலஸ்)



Spanish மொழி கற்கலாம்

இந்த பாடத்தில் நாம் செய்யும் தொழில்களை ஸ்பானிஷ் மொழியில் எப்படி கூறுவது என்பதை பற்றி அறியலாம்.
careers---carreras(கர்ரேராஸ்)



I am a police officer.---Soy oficial de policía.(சோய் அஃபிசியல் தே போலீஸியா)
I am a student.--Soy estudiante.(சோய் எஸ்தூதியன்தே)
I am a doctor.-----Soy médico.(சோய் மெடிகோ)
I am a bus driver.-Soy conductor de autobús.(சோய் கண்துக்டர் தே ஆட்டோபூஸ்)
He is a mechanic.----Él es mecánico.(எல் எஸ் மெகானிகோ)
She is a nurse.----Ella es enfermera.(ஈஜா எஸ் என்பெர்மா)
She is a teacher.--Ella es profesora.(ஈஜா எஸ் புரொபசோரா)
He is a manager.-----Él es gerente.(எல் எஸ் ஹூரான்தே)
 I am a blacksmith---Yo soy un herrero(யோ சோய் உன் ஹெர்ரேரோ)
I am a goldsmith----Soy un orfebre(சோய் உன் அர்பேபரி)
He is  a lawyer.----Él es un abogado.(எல் எஸ் உன் அபகேடோ)
I am a scientist.----Soy científico.(சோய் சயின்டிபிகோ)
He is a postman.-------Él es cartero. (எல் எஸ் கரதேரோ)



 

Thursday, April 28, 2011

சைட் டிஷ்

சப்பாத்தி ,புல்கா, ரோட்டிக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ் சௌசௌ தால் மாக்கனி. தால் மாக்கனி ,வட இந்திய உணவு.  அதிகம் விரும்பி உண்ணக் கூடியது.

தேவையானவை
சௌசௌ--1
காரட்--2
வெண்ணை 2 ஸ்பூன்
துவரம் பருப்பு ,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, வகைக்கு கால் கப்
உப்பு தேவையான அளவு

அரைப்பதற்கு

தேங்காய் 1கப்
பச்சை மிளகாய் 3
சீரகம் 1ஸ்பூன்
வறுத்த நிலக்கடலை 1பிடி
மிளகு 1ஸ்பூன்

தாளிக்க
கடுகு
சீரகம்
கறிவேப்பிலை

தால் துவங்கும் முன் செய்ய வேண்டியவை

பருப்புகளை குழைய வேகவைக்கவும். அரைத்து வைக்கவும்.காய்களை வேகவைத்துக் கொள்ளவும்.


கடாயில் வெண்ணை போட்டு லேசாக உருகியதும் கடுகு சீரகம் ,தாளித்து வேகவைத்து வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும்,அதோடு வேகவைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறக்கும் முன் தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
மிருதுவான சப்பாத்தி செய்து இந்த சைட்டிஷ் வைத்து நன்கு ருசித்து சாப்பிடவும்.