Saturday, March 12, 2011

இசை--எளிய அறிமுகம் ---2

வேத காலத்திற்கும் முன்பிருந்தே நம் நாட்டில் இசைக்கான வடிவம் இருந்து வருகிறது.இணை பிரியாத கலாச்சாரமாகவே பல நூற்றாண்டுகளாக இசை இருக்கிறது.ஒரு கந்தர்வரான நாரதர் இசைக்கான ஒரு வடிவத்தை சங்கீத மகரந்தம் என்னும் பெயரில் தந்தார்.இதில் இசைக்கான குறிப்புகள்,வாய்ப்பாட்டு,கருவியிசை,நாட்டியம் போன்ற அனைத்திற்கும் வடிவங்களை தந்துள்ளார்.இதில் இரு முக்கிய பாகங்கள் உள்ளன.அவை சங்கீததியாயம்,நிருத்தியதியாயம்.ஒவ்வொன்றும் 4 பாகங்களை கொண்டது.
தனது தனி பாணியாக இவர் நாதம்,ஸ்ருதி,ஸ்வரம்,கிரமம்,மூர்ச்சனை,தானம் என்பவற்றை நெறிபடுத்தி கூறியுள்ளார்.இந்த பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கின்ற நாத பிரம்மத்தையே இவர் இசையாக்கியுள்ளார். நாதமும் வேதத்திலிருந்து வந்தது.அதுவும் சாம வேதத்திலிருந்து வந்தது.ஈசன் சாம கானப் பிரியன்.யார் சாம கானம் பாடினாலும் மகிழ்ந்து கேட்கும் வரமெல்லாம் தருவார். அதனால் தான் இலங்கை மன்னன் ராவணனும், சாம கானம் இசைத்து கைலாய மலையே உருக வைத்தான். அத்தனை குழைவும், நெகிழ்வும் கொண்டது சாம வேதம்.
இதில் கரகரப்பிரியாவின் ஆதார ஸ்வரங்கள் ஏழும் இறங்குமுகமாக உள்ளது.நாரதர்,தனது சங்கீத மகரந்தத்தில் 93 ராகங்களை வகைப்படுத்தியுள்ளார்.
Ranjana (இன்னிசை தரும்)