Monday, April 11, 2011

தோட்டம் போடலாமா?

இன்றைய அவசர யுகத்தில் தோட்டங்கள் போட நேரம் ஏது? என்கிறீர்களா.வயல் வெளிகள் எல்லாம் ரியல் எஸ்டேட்களாக மாறிக் கொண்டிருக்கும் இச்சூழலில் நமது வீட்டில் வெகு எளிமையாக தோட்டத்தை , இருக்கும் சிறு இடத்திலேயே அமைக்க முடியும், என் வீட்டு மாடியில் மிகப் பெரிய தோட்டத்தை நான் அமைத்திருக்கிறேன்.தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும். மற்றவை மிக எளிது. முதலில் நீங்கள் என்ன விதமான தோட்டம் அமைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது ,அலங்காரத் தோட்டமா,காய்கறித் தோட்டமா, பழத்தோட்டமா, உள் அலங்காரத்திற்கான செடிகளை வளர்க்கப் போகிறீர்களா என்பனவற்றை முடிவு செய்யுங்கள். பின்னர் அதற்கான இடத்தை தெரிவு செய்யுங்கள். மாடி, பால்கனி, வீட்டு முன், வீட்டிற்கு பின் என எங்கு வேண்டுமெனினும் இடத்தை தேர்வு செய்யலாம்.
                       (இன்னும் வழிகள் கூறுகிறேன்)

Spanish மொழி கற்கலாம்-3

பாடம்--3
Good morning---- Buenos días(பியூனோ டியாஸ்)
Good Afternoon , Good Evening------Buenas tardes (பியூனோ தார்தேஸ்)
Good Night----Buenas noches(பியூனோஸ் நோச்சஸ்)
எப்படி இருக்கிறாய்(How are you?)----¿Cómo estás?(கோமாஸ் எஸ்டஸ்?)
நன்றாக இருக்கிறேன்(I am good)---Estoy bien(எஸ்டோய் பியன்)
நன்றாக இருக்கிறேன் நன்றி.நீங்கள் (I am good. Thank you. And you?)----- Estoy bien. Gracias. ¿Y usted?(எஸ்டோய் பியன்.கிரேசியஸ்.யு உஸ்தத்)இவ்வளவு நன்றாக இல்லை(I am not so good)------No estoy bien(நோ எஸ்டோய் பியன்)

உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்(Nice to meet you)-- Mucho gusto en conocerte(முசோ குஸ்டோ என் கோனோசெர்தே)
Nice to meet you too---Es un gusto en conocerte también.(எஸ் உன் குஸ்டோ கோனோசெர்தே தம்பியன்)
V.RANJANA