Sunday, May 8, 2011

புலங்கறி

கேரள மாநில உணவுகளில் தேங்காய் அதிகளவு இடம் பிடித்திருக்கும். அதுபோல சுவையும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். நம் ஊர் காரக்குழம்பு போல கேரளாவில் செய்யப்படும் குழம்பு வகை புலங்கறி.

தேவையானவை

சேப்பங்கிழங்கு-- கால் கிலோ
புளி---- கோலி அளவு
தேங்காய் ----அரைமூடி
பச்சை மிளகாய்---2
உப்பு ---தேவையான அளவு
வெல்லம்---சிறது

1ஸ்பூன் வெந்தயம், 2 சிவப்பு மிளகாய் வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.

புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணை விட்டு சீரகம், கடுகு தாளித்து விட்டு ,அதில் புளி கரைசலை விட்டு கொதிக்கவிடவும். பின் சேப்பங்கிழங்கு, பச்சை மிளகாய், சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும். வெல்லம் சிறிதளவு சேர்த்து, கொத்தமல்லி தழை தூவவும், 2 ஸ்பூன் தேங்காய் எண்ணை சுட வைத்து இறுதியில் சேர்க்கவும்.