Tuesday, May 3, 2011

பாரம்பரிய சமையல்

நம் பாரம்பரிய உணவு முறைகளை விடாமல் கடைப்பிடித்தாலலே பெருமளவு நோய்களை தவிர்க்கலாம். இப்போதெல்லாம் ஜங் புட்ஸ் ,மோகம் அதிகளவு உள்ளதால் நம் பழமை மறந்தே விட்டது.

ஆரோக்கிய வாழ்விற்கு திப்பிலி சட்னி

தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் ---10தக்காளி ---2
புளி ----சின்ன கோலி அளவு
உப்பு தேவையான அளவு
 பெருங்காயம் சிறிது

வறுத்து கொள்ள வேண்டியவை

 அரிசி திப்பிலி(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)----2 ஸ்பூன்
மிளகு ---1 ஸ்பூன்
சீரகம்---அரை ஸ்பூன்
மல்லி விதை----2 ஸ்பூன்
ஓமம்----கால் ஸ்பூன்


 செய்முறை
வெங்காயம் ,தக்காளி லேசாக வதக்கவும்.
வறுக்க கொடுத்துள்ள சாமான்களை  வறுத்து அதோடு வெங்காயம், தக்காளி்  , உப்பு, புளி, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் நெய்யை சாதத்தில் ஊற்றி  பிசைந்து சாப்பிடலாம்.

பயன்கள்

ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. வாயுத் தொல்லை, சளி ,இருமல் நீங்கும்.பிள்ளை பேறு அடைந்த பெண்களுக்கு மிகவும் நல்லது.






TIPS

 பட்டுப்புடவைகளை விரும்பாத நங்கையர்களே இருக்க முடியாது.அதிக விலை தந்து வாங்கும் புடவையை எப்படி பராமரிப்பது? சில டிப்ஸ் .....


புடவையை கட்டிய பிறகு வியர்வை வாடை போக சிறிது நேரம் நிழலில் காயவைத்து பின் எடுத்து மடித்து வைக்க வேண்டும்.
அடிக்கடி துவைத்துக் கொண்டே இருக்க கூடாது.அப்படி செய்வதால் பளபளப்பு குறையும்.

புடவையை துவைக்க கடினமான சோப்புகள், பவுடர்கள் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக தலைக்கு போடும் ஷாம்புவை சிறிது நீரில் கலந்து அதில் புடவையை நனைத்து துவைக்கலாம்.

நம்மை அறியாமல் ஏதேனும் கரை படிந்து விட்டால் கவலை வேண்டாம்... சிறிது யூகலிப்டஸ் தைலம் பயன்படுத்தி, பஞ்சினால் துடைத்தால் கரை பளிச்.

புடவையை மடித்து வைக்கும் போது அதன் ஜரிகை பகுதி உள்புறமாக இருக்கும் படி வைத்து மடிக்க வேண்டும். இதனால் ஜரிகை கறுத்து போகாது. மேலும் ஏதாவது துணியின் உள் வைத்து  மூடி  வைக்க வேண்டும்.

இரும்பு பீரோவில் வைப்பதை முடிந்தவை தவிர்த்தல் நலம்.