Friday, May 6, 2011

TIPS

ஆரஞ்சு பழ தோலை தூக்கி எறியாமல், முக அழகிற்கான ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.
ஆரஞ்சு தோலை காய வைத்து நன்கு உலர்ந்தது---1கப்,
காய்ந்த ரோஜா இதழ்--1கப்
இது இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் பொடியாக்கவும்.அதோடு கடலைமாவு---2கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து ,அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி ,காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் முகப் பளபளப்பு கிட்டும்.

டிப்ஸ்---2
பாலை காய்ச்சியவுடன் அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

டிப்ஸ்---3
தக்காளியை ஜூஸ் செய்து அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு கிட்டும்.

டிப்ஸ்--4
வெண்ணை சிறிது எடுத்து நன்கு குழைத்து முகத்தில் ,முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும்.கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.

டிப்ஸ்--5
நன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை கூழாக்கி அதையும் முகத்தில் தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு  கூடும்.







ஆரஞ்சு தோல் புளிக்குழம்பு

ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அதன் தோலில் தான் மிக அதிகளவு சத்துக்கள் உள்ளன.மேனி அழகு தர தேவையான மினரல்கள் அதில் உள்ளன.
ஆரஞ்சு பழ தோல் புளிக்குழம்பு

தேவையானது

ஆரஞ்சு பழத் தோல் நறுக்கியது---1கப்
புளி கோலி அளவு
உப்பு --தேவையான அளவு
நல்லெண்ணை---1 குழிக்கரண்டி
வெல்லம் --சிறிது

வறுத்து அரைக்க

கடலைப்பருப்பு---1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு---2 ஸ்பூன்
மல்லி விதை----4 ஸ்பூன்
மிளகாய் வத்தல்----3
கடுகு, வெந்தயம்---1ஸ்பூன்

தாளிக்க
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம்.


1கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,மல்லிவிதை, மிளகாயை சிறிது எண்ணை விட்டு சிவக்க வறுக்கவும். கடுகு, வெந்தயம் தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் பொடியாக்கவும்.

2புளியை கெட்டியாக கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

3கடாயில் சிறிதளவு எண்ணைவிட்டு ஆரஞ்சு தோலை மிருதுவாகும் வரை வதக்கவும்.

4புளித்தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கொதிக்கும் போது அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு கட்டி தட்டாமல் கிளறவும்.

5நன்கு கொதிக்கும் போது உப்பு ,வெல்லம், நல்லெண்ணை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு ,தாளித்து ,அதை குழம்பில் சேர்க்கவும்.



சூப் ---சாலட் வகைகள்

ஹெல்தியான சாலட் வகை ---2


பீட்ரூட்--உருளைக்கிழங்கு பச்சடி


தேவையானவை


பொடியாக நறுக்கி வேகவைத்த  உருளைக்கிழங்கு---2கப்
பொடியாக நறுக்கி வேகவைத்த பீட்ரூட்--1கப்
கெட்டித் தயிர்---2 கப்
உப்பு ---தேவையானது

தாளிக்க

கடுகு,கறிவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய்


எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து, அதில் தாளித பொருட்களை தாளித்து சேர்க்கவும்.

பயன்கள்

பீட்ரூட்டில் நிறைய விட்டமினகள் உள்ளது. இரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. ரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி இந்த சாலட் உண்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.



சூப் ---சாலட் வகைகள்

ஹெல்தியான சாலட் வகைகள்

 இள வயதினர் சரியாக சாப்பிடவில்லை எனில் கல்லை தின்றாலும் கரைக்கும் வயசு ,இப்படி சாப்பிடாமல் இருந்தால் எப்படி என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவதை கேட்டிருக்கிறோம்.  நமது சிறு நீர்பையில் சேரும் கல்லை கரைக்கும் ஆற்றல் கொண்டது வாழைத்தண்டு. இதை பச்சையாக உண்டாலும், சமைத்து உண்டாலும் நிச்சயம் பலன் கிட்டும்.

வாழைத்தண்டு பச்சடி

தேவையானவை
வாழை த்தண்டு பொடியாக நறுக்கியது ---1கப்
கெட்டித்தயிர்--- 2கப்
தேங்காய் துருவல் ---1 கைப்பிடி
பச்சை மிளகாய் ---2
உப்பு தேவையானது

தாளிக்க
சீரகம்
கடுகு
கறிவேப்பிலை


தேங்காய் ,பச்சை மிளகாயை அரைத்துக் கொண்டு, அதோடு நறுக்கிய வாழைத்தண்டு ,தயிர் ,உப்பு சேர்த்து கலக்கவும். தாளித பொருட்களை போட்டு தாளித்து ,தயிர் கலவையில் சேர்க்கவும். சுவையான தயிர் பச்சடி ரெடி.சாம்பார் சாதம், புளியோதரைக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.