Thursday, April 21, 2011

side dishes

 மூங்க் தால் கோப்தா கறி
முளை கட்டிய பாசிப் பயறு --1கப்
அரைக்கீரை---1கப்
உப்பு தேவையானது
மிளகாய் தூள் 1ஸ்பூன்
சோள மாவு 2ஸ்பூன்
கிரேவிக்கு
முந்திரி --10(விழுதாக அரைக்கவும்)
தேங்காய் பால் ---1கப்
வெங்காயம் --கால் கிலோ
தக்காளி---4
இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
உப்பு தேவையானது
கரம் மசாலா 1ஸ்பூன்





 கோப்தா செய்வதற்கு--- 
 step 1: அரைக் கீரையை வேக வைத்து நன்றாக மசிக்கவும்.
 step 2: முளை கட்டிய பாசிப் பயிறையும் வேக வைத்து மசிக்கவும்.  
step 3: கீரை, பயிறு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, சோள மாவு கொஞ்சம் சேர்த்துப் பிசைந்து உருண்டையாக உருட்டி எண்ணையில் பொரித்துக் கொள்ளவும்.  
கிரேவி செய்வதற்கு---
step 1: 10 முந்திரியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். 
step 2: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வதக்கவும், அதில் இஞ்சி ,பூண்டு விழுது, தக்காளி சேர்க்கவும்
 step 3: மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,முந்திரி விழுது, உப்பு போட்டு நன்றாகக் கொதிக்கவிடவும்.  
step 4: இறுதியில் கெட்டியான தேங்காய் பால் சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். 
step 5: பரிமாறுவதற்கு முன் பொரித்த கோப்தாக்களைப் போடவும். இல்லாவிட்டால் அதிகமாக ஊறிவிடும். நன்றாக இருக்காது.

புல்கா, சப்பாத்தி, நான் வகைகளுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

பயன்கள்
முளைகட்டிய பயறு உபயோகிப்பதால் புரதச்சத்து நிறைந்தது. கீரையில் விட்டமின் ஏ.பி போன்ற சத்துக்கள் உள்ளது.


variety rice

கோவைக்காய்(கறிக் கோவை) சாதம்

தேவையானவை

கறிக்கோவை --கால் கிலோ
அரிசி ---1கப்
உப்பு தேவையான அளவு

வறுத்து அரைக்க
கடலைப்பருப்பு 2ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 4ஸ்பூன்
மிளகாய் வற்றல்--4
எண்ணை 1ஸ்பூன்


தாளிக்க 
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
வேர்கடலை
முந்திரி பருப்பு (விரும்பினால்)
கறிவேப்பிலை

எப்படிச் செய்வது ----
 step 1: கோவைக்காயை சுத்தம் செய்து நீள வாக்கில் கட் பண்ணுங்க
step 2: அரிசியை 2 கப் நீர் விட்டு உதிரான சாதமா வடிச்சு வைங்க.
step 3: எண்ணையைக் கடாயில் விட்டு , உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் போட்டு சிவக்க வறுத்துக் கொரகொரப்பா பொடி பண்ணுங்க.
step 4: கட் பண்ணி வைத்திருக்கும் கோவைக்காயைக் கடாயில் போட்டு 2 ஸ்பூன் எண்ணை விட்டு நல்லா வதக்கவும்.வதங்கியவுடன், சாதம், அரைத்த பொடி,தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா கிளறவும்.  
step 5: இன்னொரு கடாயில் தாளிதம் செய்ய 2 ஸ்பூன் எண்ணை விட்டு ,கடுகு, உளுத்தம் பருப்பு, 2 மிளகாய் வத்தல், கறிவேப்பிலை, வேர்க்கடலை சிறிது, முந்திரிப்பருப்பு சிறிது ,பெருங்காயம் போட்டு தாளித்து கிளறிய சாதத்தில் கொட்டி நல்லா ஒரு முறை கிளறிவிடவும்.  
step 6: வித்தியாசமான சுவையுடன் கூடிய கறிக்கோவை பாத் தயார்.

பயன்கள்
அதிக நீர்ச்சத்து கொண்டது கறிக்கோவை. டயாபடீஸ் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்தது இது.லஞ்ச் பாக்ஸிற்கும் ஏற்றது.




ருசியான டிபன்

பாலக் பட்டூரா
தேவையானவை

1கப் பாலக் கீரை
1கப் கோதுமை மாவு
2 பச்சை மிளகாய்
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க தேவையான அளவு

செய்வது சுலபம்


step1:   பாலக் கீரையை லேசாக வதக்கி,மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
step 2:   கோதுமை மாவுடன் அரைத்த கீரை விழுதை சேர்த்து, உப்பு, கொஞ்சம் மிளகாய் தூள்(தேவைப்பட்டால் மட்டும்),  பச்சை மிளகாய்(கீரையிலேயே அரைத்தும் விடலாம்) சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
step 3: அதை பூரி போல் திரட்டி எண்ணையில் பொரிக்கவும்
step 4: சூடாக பீஸ் பட்டர் மசாலா அல்லது சென்னா மசாலாவுடன் ருசித்து சாப்பிடவும்.

குறிப்பு

 பூரி உப்பலாக வர ஒரு ரகசியம்,2 ஸ்பூன் ரவையை வறுத்து மாவில் சேர்க்க பூரி சூப்பர் உப்பலாக நீண்ட நேரம் இருக்கும்.

பயன்கள்

பாலக் கீரையில் இரும்புத் சத்து அதிகம் உள்ளது. கர்பிணிகள், பால்கொடுக்கும் தாய்மார்களுக்கு நல்லது. சாப்பிட தொல்லை தரும் பிள்ளைகளும் இதை விரும்பி சாப்பிடுவர்.




பாயசம்


அப்பி பாயசம்
பாயசங்களில் வித்தியாசமானதும் ,மிகுந்த சுவை மிக்கதும் ,பாரம்பரியமானதும் கூட. ஒவ்வொரு கர்நாடக வீட்டு விஷேசங்களில் தவறாமல் இடம் பெற்றிருக்கும். இனி செய்முறைக்கு வருவோம்.

தேவையான பொருட்கள்
ரவை ---100
கிராம்

சர்க்கரை --250 கிராம்
பால்--1லிட்டர்
நெய் () எண்ணெய் ---பொரிக்கத் தேவையான அளவு
ஏலப் பொடி---- சிறிதளவு

முந்திரி---10
கிஸ்மிஸ்---கொஞ்சம்
செய்முறை
ரவையை சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவிடவும். பின் சிறு சிறு பூரிகளாகத் திரட்டி நெய்யில் பொன்னிறமாகப் பொரிக்கவும். சிறிது ஆறிய பின் கையால் தூளாக்கவும் (பெரிதும்,சிறிதுமாக இருக்க வேண்டும். நைஸாக கூடாது.).பாலை 2 பாகமாகப் பிரித்துக் காய்ச்சிக் கொள்ளவும். ஒரு பகுதியில் தூளாக்கிய ரவை பூரியைப் போட்டு நன்கு வேக விடவும். வெந்த பிறகு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்து வரும்போது 2வது பாகப் பாலை ஊற்றி ,ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி ,கிஸ்மிஸ் சேர்த்துக் கீழே இறக்கவும்.சமைத்து, சுவைத்து ரிஸல்ட் எப்படி என்று கூறுங்கள்

குறிப்பு
சர்க்கரையை குறைத்துக் கொண்டு கன்டன்ஸ்டு மில்க் கூட சேர்க்கலாம் இன்னும் சுவையாக இருக்கும்.