Tuesday, April 26, 2011

Spanish மொழி கற்கலாம்

சென்ற பாடத்தில் நாம் பார்த்த அட்ஜெக்டீவ்ஸின்(adjectives) தொடர்ச்சி.


The flowers smell sweet.----Las flores de olor dulce.(லா ஃப்ளோர் தே ஓலார் துல்சே.)
It tastes sour.-----Tiene un sabor amargo9டியன்னே உன் சபர் அமார்கோ.).
We feel warm.------Nos sentimos caliente.(நோஸ் சென்டிமோஸ் காலியன்தே.)
He looked angry.----------Parecía enojado.(பராசியா எனஹாதோ)
Sita is a clever girl.-----------Sita es una chica inteligente.(சீதா எஸ் உனா சீகா இன்டலிஹன்தே.)
He gave me five mangoes.----Me dio cinco mangos.(மே டியோ சீன்கோ மேங்கோஸ்.)
The boy is lazy.----------El niño es perezoso.(எல் நினோ எஸ் பெரேசோஸோ.)
I ate some rice.-----Comí un poco de arroz.(கோமி உன் போகோ தே அர்ரோஸ்.)
The hand has five fingers.---------La mano tiene cinco dedos. (லா மானோ டியன்னே சீன்கோ தேதோஸ்.)   
                                               (மேலும் கற்கலாம் )



   

முத்துக்களை எடுக்கவோ....கோர்க்கவோ....

இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள எப்பவும் தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி தானா என்று அலுத்துக் கொள்வீர்களா ? இதை டிரை செய்யுங்க அலுப்பு தட்டாது.

முத்து மணிக் குருமா

தேவையானவை

புழுங்கல் அரிசி 100 கிராம்
பச்சரிசி 50 கிராம்
தயிர் 3 கப்
வெங்காயம் 2
கரம் மசாலா தூள் 2ஸ்பூன்
எண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

அரைப்பதற்கு
 பச்சை மிளகாய்--5
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 10
தேங்காய் துருவல் 1கப்


தாளிக்க 
 பட்டை, சோம்பு, 

குருமா செய்ய துவங்கலாமா

அரிசிகளை 1மணி நேரம் ஊற விடவும். பின் கெட்டியாக அரைக்கவும்.அரை டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து, ஒரு சிட்டிகை உப்பு, 1ஸ்பூன் எண்ணை விட்டு அரைத்த மாவை கொட்டி கொழுக்கட்டை மாவு போல் கிளறவும்.சிறிது ஆறிய பின் ,சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் வைத்து 7 நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.
        கடாயில் எண்ணை விட்டு ,பட்டை சோம்பு ,  தாளித்து , நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.அரைத்து வைத்துள்ளதை போட்டு வாசம் போகும் வரை வதக்கவும். வேகவைத்துள்ள உருண்டைகள், தேவையான உப்பு போட்டு கிளறவும். இறுதியில் தயிர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு , கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.




தோட்டம் போடலாமா?--2

                  இடத்தை தேர்வு செய்தபின், இரண்டாவது கட்டம் மண்ணை தேர்வு செய்வது. நல்ல விளைச்சல் தர எப்படிப்பட்ட மண்ணாக இருக்க வேண்டும் , சத்துள்ள , வடிகால் வசதியுள்ள மண் தேவை. தோட்டம் அமைப்பதற்கு ஏற்ற மண்ணை எப்படி கண்டுபிடிப்பது எனக்கு எதுவுமே தெரியாதே என்று நீங்கள் குழம்ப வேண்டாம்.தரை தளத்தில் நீங்கள் தோட்டம் அமைக்க இடத்தை தேர்வு செய்திருந்தால், முதலில் செய்ய வேண்டியது, அந்த மண்ணை லேசாக கொத்தி விட்டு காய்ந்த இலை,தழைகள்,காய்கறி கழிவுகள், மாட்டுச் சாணம் (கிடைத்தால் போடுங்கள் ),போன்றவற்றை கொட்டி தினமும் லேசாக தண்ணீர் தெளித்து மக்க விடுங்கள், இவ்வாறு செய்வது நிலத்திற்கு நல்ல ஊட்டச் சத்தினை தரும்.
                      என்னிடம் இடமில்லை ,நான் என்ன செய்வது என்று கேட்பது கேட்கிறது. தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம்.  இதற்கு முதலில் கரம்பை மண்(குளத்து மண்), ஆற்று மண், செம்மண் மூன்றையும் சரிசம அளவில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மக்கிய தொழு உரம், அல்லது காய்ந்த இலை சருகுகள்,காய்கறி கழிவுகள், உண்டு மீந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றை  குவித்து அதன் மீது கலந்து வைத்துள்ள மண்ணையும் கொட்டி  4--7 நாட்களுக்கு அப்படி யே விட்டுவிட வேண்டும். சிறிதளவு தண்ணீர் தெளித்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இலைசருகுகள் மக்க ஆரம்பிக்கும்.இது செடிகளுக்கு தேவையான சத்துகளை தரும்.இவ்வாறு செய்யும் போது மண்வளம் அபரிமிதமாகும் .மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி,மண்ணுக்கு தேவையான தழை,மணி, சாம்பல் சத்துகள் கிடைப்பதோடு, மண் புழுக்களும் உற்பத்தியாகும்.
                                                                                    (மேலும் வழிகள் கூறுகிறேன்)