அடைமழை விட்ட பிறகு தங்க நிறத்தில் வானம் ஜொலிக்கும் போது ஏற்படும் சந்தோஷமும் அமைதியும் அலாதியானது அதுபோலதான் மனிதனும் சரி அவரது எழுத்தும் சரி அலாதியான்து.வாசகனை எளிதில் வசீகரிக்ககூடியது. கூர்ந்து கவனித்தலும் குறு நகைப்பும் இவரது எழுத்தின் ஆதார சுருதிகள். துயர அங்கதத்தை எழுத்தில் கொண்ர்வது அவ்வளவு எளிதல்ல அது வீரியமிக்கது .கூறும் கருத்தை மனதில் பதியவைப்பது நினைத்துபார்க்கும் போது வேதனை தருவது .ஆங்கில எழுத்தாளரான பி. ஜி.உட்ஹவுஸை நினைவு கூர வைப்பது பாஸ்கர் சக்தியின் எழுத்துகள்.பழுப்பு நிற புகைப்பட சிறுகதை தொகுப்பில் இந்த அங்கதம் விரவி பரவி இருப்பதை காணலாம்.த.மு.எ.க.ச, பத்திரிக்கை ,தொலைக்காட்சி இப்போது திரைப்படம் என வெற்றித்தடம் பதிக்கும் இவருக்கு தகுந்த வயதில் தமிழக அரசு தரும் உரிய மரியாதை கலைமாமணி விருது.
கலைமாமணி பாஸ்கர் சக்தி எழுத்தி்ன் வீரியமும் அவற்றின் உண்மை சக்தியும் கொண்ட திண்ணிய இலக்கியம் மென்மேலும் படைப்பார் என்பது என் நம்பிக்கை.
No comments:
Post a Comment