ராஜ்மா, லெக்யூம்ஸ் என்று சொல்லும் சோயா பீன்ஸ் வகையை சேர்ந்தது. இதில் அதிகளவு புரதம், நார்சத்து, ஃபோலிக் ஆசிட், கால்சியம் ,விட்டமின் பி6 ,மெக்னீசியம், மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இது ,ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கும், குளுக்கோஸ் அளவை குறைத்து நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் ,வந்தவர்களுக்கு அந்த அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.
ஹார்ட் அடாக் தடுப்பானாக, சில வகை கேன்சர் தடுப்பானாகவும் இது செயல்படுகிறது. 1 கப் ராஜ்மா ,45.3 % நார்ச்சத்து கொண்டது. 620 கலோரிகள் தரும்.
ராஜ்மா மசாலா கறி செய்ய தேவையானவை
ராஜ்மா 1கப்
வெங்காயம் நறுக்கியது --1கப்
தக்காளி நறுக்கியது---அரை கப்
இஞ்சி --பூண்டு விழுது ---1 ஸ்பூன்
பச்சை மிளகாய்--2
தனியா தூள்---1 ஸ்பூன்
மிளகாய் தூள் ---1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் ---1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
தாளிக்க
பட்டை சோம்பு கிராம்பு
அலங்கரிக்க
கொத்தமல்லி தழை, பிரஷ் கிரீம்
ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து, குக்கரில் வேகவைக்கவும்.
கடாயில் எண்ணை விட்டு தாளித்து ,வெங்காயம் ,வதக்கவும். லேசான பொன்னிறம் வந்தவுடன், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
வதங்கியதும், தக்காளி சேர்க்கவும். நன்கு சுருள வதங்கியதும், வேகவைத்த ராஜ்மா ,
தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, உப்பு போட்டு தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கொத்தமல்லி தழை, பிரஷ் கிரீமால் அலங்கரிக்கவும்.
சப்பாத்தி, பூரி, புலாவ் போன்றவற்றிர்க்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.
No comments:
Post a Comment