இடத்தை தேர்வு செய்தபின், இரண்டாவது கட்டம் மண்ணை தேர்வு செய்வது. நல்ல விளைச்சல் தர எப்படிப்பட்ட மண்ணாக இருக்க வேண்டும் , சத்துள்ள , வடிகால் வசதியுள்ள மண் தேவை. தோட்டம் அமைப்பதற்கு ஏற்ற மண்ணை எப்படி கண்டுபிடிப்பது எனக்கு எதுவுமே தெரியாதே என்று நீங்கள் குழம்ப வேண்டாம்.தரை தளத்தில் நீங்கள் தோட்டம் அமைக்க இடத்தை தேர்வு செய்திருந்தால், முதலில் செய்ய வேண்டியது, அந்த மண்ணை லேசாக கொத்தி விட்டு காய்ந்த இலை,தழைகள்,காய்கறி கழிவுகள், மாட்டுச் சாணம் (கிடைத்தால் போடுங்கள் ),போன்றவற்றை கொட்டி தினமும் லேசாக தண்ணீர் தெளித்து மக்க விடுங்கள், இவ்வாறு செய்வது நிலத்திற்கு நல்ல ஊட்டச் சத்தினை தரும்.
என்னிடம் இடமில்லை ,நான் என்ன செய்வது என்று கேட்பது கேட்கிறது. தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம். இதற்கு முதலில் கரம்பை மண்(குளத்து மண்), ஆற்று மண், செம்மண் மூன்றையும் சரிசம அளவில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மக்கிய தொழு உரம், அல்லது காய்ந்த இலை சருகுகள்,காய்கறி கழிவுகள், உண்டு மீந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றை குவித்து அதன் மீது கலந்து வைத்துள்ள மண்ணையும் கொட்டி 4--7 நாட்களுக்கு அப்படி யே விட்டுவிட வேண்டும். சிறிதளவு தண்ணீர் தெளித்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இலைசருகுகள் மக்க ஆரம்பிக்கும்.இது செடிகளுக்கு தேவையான சத்துகளை தரும்.இவ்வாறு செய்யும் போது மண்வளம் அபரிமிதமாகும் .மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி,மண்ணுக்கு தேவையான தழை,மணி, சாம்பல் சத்துகள் கிடைப்பதோடு, மண் புழுக்களும் உற்பத்தியாகும்.
(மேலும் வழிகள் கூறுகிறேன்)

நம்மில் பலர் மறந்துபோன மண்வாசம் மீண்டும் தங்களின் பதிவில் சுவாசிக்கிறேன் . பயனுள்ள பதிவு நன்றி நண்பரே
ReplyDeleteநண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்.
ReplyDeleteமொட்டை மாடியில் தோட்டம் போடுவதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
ReplyDelete