Tuesday, April 26, 2011

முத்துக்களை எடுக்கவோ....கோர்க்கவோ....

இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள எப்பவும் தேங்காய் சட்னி, வெங்காயச் சட்னி தானா என்று அலுத்துக் கொள்வீர்களா ? இதை டிரை செய்யுங்க அலுப்பு தட்டாது.

முத்து மணிக் குருமா

தேவையானவை

புழுங்கல் அரிசி 100 கிராம்
பச்சரிசி 50 கிராம்
தயிர் 3 கப்
வெங்காயம் 2
கரம் மசாலா தூள் 2ஸ்பூன்
எண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

அரைப்பதற்கு
 பச்சை மிளகாய்--5
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 10
தேங்காய் துருவல் 1கப்


தாளிக்க 
 பட்டை, சோம்பு, 

குருமா செய்ய துவங்கலாமா

அரிசிகளை 1மணி நேரம் ஊற விடவும். பின் கெட்டியாக அரைக்கவும்.அரை டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து, ஒரு சிட்டிகை உப்பு, 1ஸ்பூன் எண்ணை விட்டு அரைத்த மாவை கொட்டி கொழுக்கட்டை மாவு போல் கிளறவும்.சிறிது ஆறிய பின் ,சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் வைத்து 7 நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.
        கடாயில் எண்ணை விட்டு ,பட்டை சோம்பு ,  தாளித்து , நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.அரைத்து வைத்துள்ளதை போட்டு வாசம் போகும் வரை வதக்கவும். வேகவைத்துள்ள உருண்டைகள், தேவையான உப்பு போட்டு கிளறவும். இறுதியில் தயிர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு , கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.




1 comment:

  1. அப்படியே எனக்கு ரெண்டு பார்சல்

    ReplyDelete