புலாவ் பொதுவாக அரிசியில் செய்வார்கள்.சற்று வித்தியாசமாக கேழ்வரகு மாவில் புலாவ் செய்யலாமே.
தேவையானவை
வெங்காயம் நறுக்கியது ---2
காரட், பீன்ஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு, நறுக்கியது ---வகைக்கு 1கப்
பச்சை பட்டாணி வேகவைத்தது---1கப்
இஞ்சி --- பூண்டு விழுது---2 ஸ்பூன்
பச்சை மிளகாய்---3
கேழ்வரகு மாவு--- 2 கப்
உப்பு தேவை யானது
எண்ணை தேவையான அளவு
வெண்ணை --1ஸ்பூன்
கரம் மசாலா தூள் --1 ஸ்பூன்
கடாயில் வெண்ணை போட்டு வெங்காயம் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பட்டாணி, காய்களை போட்டு வேகவிடவும். காய்களுக்கு தேவையான உப்பு மட்டும் சேர்க்கவும். கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, உப்பு , ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணை விட்டு பட்டை சோம்பு கிராம்பு தாளித்து ,கரைத்த மாவை போட்டு கிளறவும். உதிர் உதிராக வரும் வரை கிளறவும். அதோடு வேகவைத்த காய்கள் சேர்த்து நன்கு கிளறி , கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
தயிர் வெங்காயம், வெண்டைக்காய் பச்சடியோடு சூடாக பரிமாறலாம்.

No comments:
Post a Comment