Saturday, May 7, 2011

சிற்றுண்டிகள் --snacks

சோயா பீன்ஸின் அதிகளவு புரதச்சத்து உள்ளது. புலால் உண்ணாதவர்களுக்கு தேவையான அனைத்து வித சத்துக்களையும் தரவல்லது. சோயா பீன்ஸ் உருண்டைகள் டோஃபு (meal maker) தற்போது அதிகளவு மார்கெட்டில் கிடைக்கிறது. இதை வைத்து சுவையான ஒரு மாலை நேர சிற்றுண்டி செய்யலாம்.

சோயா ---வெஜ் போண்டா
தேவையானவை

பூரணம்  செய்ய
சோயா உருண்டைகள்---1கப்
கேரட் நறுக்கியது ----1கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு ---2
நறுக்கிய பீன்ஸ்---1கப்
வெங்காயம் நறுக்கியது ---1கப்
தக்காளி நறுக்கியது---அரை கப்
மிளகாய் தூள்---1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் --1 ஸ்பூன்
உப்பு  தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு

தாளிக்க
சீரகம், பட்டை சோம்பு.



சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் வைக்கவும். பின் அதை பிழிந்து பச்சை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். பிறகு அதை மிக்ஸியில் அடித்தால் துருவல் போல் வரும்.
கடாயில் 1 ஸ்பூன் எண்ணை விட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் ,கேரட், பீன்ஸ் போட்டு வதக்கவும்.தக்காளி ,சோயா துருவல், உருளைக்கிழங்கு மசித்தது போட்டு மூடி போட்டு வேகவிடவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.காய்கள் நன்கு வெந்து , எண்ணை பிரியும் போது, உப்பு மிளகாய்தூள், கரம் மசாலா தூள், சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.

மேல் மாவு தயாரிக்க

கடலைமாவு---1கப்
அரிசி மாவு--- அரை கப்
மைதா மாவு--- 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மிளகாய் தூள் ---சிறிது
எண்ணை பொரிக்க தேவையான அளவு

எல்லா மாவுகளையும் ஒரு கிண்ணத்தில் போட்டு , உப்பு மிளகாய் தூள், சேர்க்கவும்.   3ஸ்பூன் சூடான எண்ணையை மாவோடு சேர்த்து கலந்து விட்டு பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலக்கவும். செய்து வைத்துள்ள பூரணத்தை உருட்டி ,கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து ,சூடான எண்ணையில் பொரிக்கவும். சுவையான சோயா ---வெஜ் போண்டா ரெடி.

குறிப்பு .

டயட்டில் உள்ளவர்கள் , உருண்டையாக செய்யாமல் , வட்ட வடிவமாக தட்டி மாவில் தோய்ந்து, ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து  கட்லெட் போல் செய்து தவாவில் குறைந்தளவு எண்ணையில் சுட்டு சாப்பிடலாம்.


No comments:

Post a Comment