Wednesday, April 20, 2011

பாரம்பரிய சமையல்

நம் முன்னோர்கள் ஜீரண கோளாறுகளுக்கு கை வைத்தியமாக இஞ்சி சாதம் செய்து தருவார்கள்.இப்போதெல்லாம் அவை மறந்தே போய்விட்டன. வீட்டில் இஞ்சியை தொக்கு போல் செய்து பிரிட்ஜில், காற்று புகாத டப்பாவில் வைத்தால் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும். எப்போது தேவையோ அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவையானவை

இஞ்சி 100 கிராம்
 மிளகாய் வற்றல் 2
புளி --பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு
சிறிதளவு வெல்லம்

தாளிக்க
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
பெருங்காயம்
நல்லெண்ணை 4 குழிக் கரண்டி

step 1:  இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும், அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
step 2:   புளியை கெட்டியாக கரைத்து வடிகட்டி வைக்கவும்.
step 3:   ஒரு கடாயில் நல்லெண்ணை விட்டு தாளித்து ,அதில் இஞ்சி விழுதை சேர்த்து நன்கு சுருண்டு வரும் சிறு தீயில் வைத்து கிளறவும்.ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். உப்பு, வெல்லம் சேர்க்கவும்.
சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம் ,இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளவும் பயன்படுத்தலாம்.

குறிப்பு 
நல்லெண்ணையில் தான் இதை செய்ய வேண்டும்.ஏனெனில் இஞ்சி சூடு கிளப்பும். அதை தணிக்க நல்லெண்ணையே சிறந்தது.

 பயன்கள்
செரிமாணத்திற்கு நல்லது.வயிற்று உப்புசம், வாயு, புளித்த ஏப்பம்  வருதல் போன்றவற்றிக்கு மிகவும் நல்லது.







No comments:

Post a Comment