குட மிளகாய் எல்லோரும் விரும்பும் ஒன்று. அதை வைத்து செய்யும் இந்த புளி மிளகாய் அலாதியான சுவை மிக்கது.சாதத்தில் பிசைந்து ,பச்சடியோடு சாப்பிட ...... ஆஹா, சூப்பர் என்று சொல்ல வைக்கும்.
தேவையான பொருட்கள்
குடமிளகாய்---2
புளி எலுமிச்சை அளவு
உப்பு தேவையான அளவு
வெல்லம்---சிறிது
நல்லெண்ணை--2 குழிக்கரண்டி
வறுத்து அரைக்க
மல்லி விதை(தனியா)---2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் ---2
கடுகு---அரைஸ்பூன்
வெந்தயம்---கால் ஸ்பூன்
தாளிக்க
கடுகு,உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை
செய்து வைக்க வேண்டிய முதல் வேலைகள்
கடாயில் எண்ணை விடாமல் தனியா ,காய்ந்த மிளகாய் தனியாகவும், கடுகு , வெந்தயம் தனியாகவும் வறுத்து ,எல்லாவற்றையும் ஒன்றாக அரைக்கவும்.
குடமிளகாயை பொடியாக நறுக்கவும்.
புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணை விட்டு ,தாளித சாமான்கள் போட்டு தாளிக்கவும். அதில் குடமிளகாய் போட்டு மிருதுவாகும் வரை வதக்கவும். புளியை ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு கொதிக்கும் போது ,அரைத்த பொடியை போட்டு கட்டி தட்டாமல் கிளறவும். நன்கு கொதித்து வரும் போது ,மஞ்சள் தூள் சிறிது, உப்பு, வெல்லம் போட்டு நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

No comments:
Post a Comment