தேவையான பொருட்கள்
பால்---1 லி
ரவை--கால் கப்
மைதா--கால் கப்
சர்க்கரை---2கப்
1லி பாலை அரை லிட்டர் ஆகும் வரை சுண்ட காய்ச்சி தனியாக வைக்கவும். சிவக்க வறுத்த ரவை கால் கப் ,மைதா கால் கப் ,இரண்டையும் பாலில் விட்டு கட்டி இல்லாமல் கிளறவும். தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். கடாயில் நெய், அல்லது எண்ணை பொரிக்க தேவையான அளவிற்கு வைத்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரிக்கவும். பின் 2 கப் சர்க்கரையை , ஒரு கம்பிப் பதம் வைத்து,பாகு காய்ச்சவும்.ஏலப்பொடி சேர்க்கவும். அதில் பொரித்த பூவாக்களை ஊறவிட்டு எடுக்கவும்.முந்திரி பாதாம் சன்னமாக சீவி அலங்கரிக்கவும். ஸ்வீட் தயார்.
No comments:
Post a Comment